Breaking News

இதுவும் பெஸ்ட் சேவிங்க்ஸ்! SIP இல் மாதம் ரூ. 8300 கட்டினால் கையில் சொளையா ரூ. 1.50 கோடி:

 


மாதம் ரூ 8,300 எஸ்ஐபியில் கட்டினால் உங்களுக்கு 10 ஆண்டுகள் கழித்து 19 லட்சம் ரூபாய் கிடைக்கும் என பொருளாதார நிபுணர் தெரிவிக்கிறார்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். அது போல் சம்பாதிக்கும் பணத்தில் எதிர்காலத்திற்கு என சேமித்து வைப்பது அவசியம். சேமிப்பு என்பது பணத்தில் மட்டுமில்லை, தண்ணீர், மளிகை பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட எல்லாவற்றிலும் இருக்க வேண்டும்.

நாம் சேமிக்க தெரிந்து கொண்டால்தான் அது குழந்தைகளும் கற்று கொள்வார்கள். அந்த வகையில் குழந்தைகளின் திருமணத்திற்கு, கல்விக்கு, என மொத்தமாக பணத்தை புரட்ட முடியாத நிலையில் உள்ளவர்கள், மாத சம்பளம் வாங்கும் முதல் மாதத்திலிருந்தே வருங்காலத்திற்கு சேமித்து வைக்கலாம்.

அந்த வகையில் பொருளாதார நிபுணர் ராஜேஷ் சில வழி முறைகளை கூறியிருந்தார். அதில் குழந்தைகளின் கல்விக் கனவை நனவாக்க, கார் வாங்க, விடுமுறைக்கு வெளிநாடு செல்ல, ஓய்வு காலத்தில் கையில் பணம் கிடைக்க என பல்வேறு விஷயங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அது போல் சேமிப்பு, முதலீடு போன்ற விஷயங்களையும் நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

அந்த வகையில் எஸ்ஐபியில் மற்றொரு பிளானையும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது Guaranteed income வேண்டுமென்றால் எஸ்ஐபியில் மாதம் 8300 ரூபாய் செலுத்தினால் அதற்கு வட்டி 12 சதவீதம் கிடைக்கும். 10 ஆண்டுகள் கழித்து நாம் செலுத்திய பணம் 9.96 லட்சம், வட்டி ரூ 9.32 லட்சம் ஆக மொத்தம் ரூ 19.28 லட்சம் கிடைக்கும்.

அப்படியே அந்த 19 லட்சத்தை Systematic Withdrawal Plan இல் 25 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் எடுத்துக் கொண்டே வந்தால், 26 ஆவது வருஷம் நீங்கள் எடுத்த பணம் போக உங்களிடம் 1.54 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட காலத்துக்கு முதலீடு பண்ணும்போது, உங்களுக்கு லாபம் நிச்சயம். 10 வருடம் கழித்து நீங்க எடுக்கும்போது சந்தை அதல பாதாளத்துல இருந்தாலும், உங்க லாபம் தான் குறையுமே தவிர நஷ்டம் வராது என தெரிவித்திருந்தார்.

No comments