Breaking News

பி.பி.யை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!

 


நன்றி குங்குமம் டாக்டர்

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர் புத்துணர்ச்சியூட்டும் திரவமாகும். இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவை கொண்டது.

இதில், ஏராளமான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்துக்கு நல்லது. குறிப்பாக ரத்த அழுத்தத்திற்கு தேங்காய்தண்ணீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பானமாகும். இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தும். கூடுதலாக, இது உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸ்மீல் என்பது பலரின் விருப்பமான காலை உணவாகும். கூடுதலாக, இது ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. ஓட்ஸ்மீலில் பீட்டா குளுக்கன் எனப்படும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இந்த நார்ச்சத்து ரத்த அழுத்த அளவைக் குறைக்கும்.

முந்திரி

முந்திரி மிகவும் ஆரோக்கியமான பருப்பு வகைகளில் ஒன்றாகும். அவை ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் புரதங்களின் ஏராளமான மூலமாகும். இதனை அவசியம் பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிட்டு வரலாம் அல்லது சாலட்களாக செய்தும் சாப்பிட்டு வரலாம். முந்திரியில் உள்ள ஏராளமான மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பழுப்புநிற அரிசி

பிரவுன் அரிசி வழக்கமான வெள்ளை அரிசிக்கு மிகவும் ஆரோக்கியமான மாற்றமாகும். பிரவுன் அரிசியின் தவிடு மற்றும் குருனையிலும் ஏராளமான புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மேலும், பிரவுன் அரிசியைக் கொண்டு பல்வேறு ஆரோக்கியமான உணவுகளைத் தயாரித்து உண்டு வரலாம். உதாரணமாக, இரவு உணவிற்கு வெள்ளை அரிசி சாதத்திற்கு மாற்றாக பிரவுன் அரிசி சாதத்தை பயன்படுத்தலாம். பிரவுன் அரிசியில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்த பிரச்னையிலிருந்து பாதுகாக்கும்.

பீட்ரூட் சாறு

உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கும் ஆரோக்கியமான சாறு, பீட்ரூட் சாறு என்றால் மிகையில்லை. பீட்ரூட் சாற்றை அவ்வப்போது குடித்து வர, ரத்த அழுத்தம் நாளடைவில் கட்டுக்குள் வந்துவிடும். இது தயாரிப்பது மிகவும் எளிது மற்றும் மிகவும் சத்தானதும் கூட இதில் ஏராளமான பொட்டாசியம் உள்ளடங்கியிருப்பதால் இதயபிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இது பயனளிக்கும். பீட்ரூட் சாற்றில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு ரத்த அணுக்களையும் உற்பத்தி செய்து ஆரோக்கியத்தைக் காக்கிறது.

தொகுப்பு: பொ.பாலாஜிகணேஷ்

No comments