1ஆம் தேதி முதல் இனி Gmail வேலை செய்யாது..? பயனர்கள் அதிர்ச்சி..!! கூகுள் நிறுவனம் பரபரப்பு தகவல்..!!
வேலை செய்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை ஜி-மெயில் பயன்பாடு என்பது அத்தியாவசியமாகவே மாறிவிட்டது.
தினந்தோறும் இதை ஒரு முறையேனும் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் பணிகளை செய்வது, வேலை பார்ப்பவர்கள் பிறருடனான தொடர்புக்காகவும் என ஜிமெயின் கணக்கை பெரும்பாலோனர் பயன்படுத்துகின்றனர்.
ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதை ஸ்டார்ட்அப் செய்வதற்கு ஜிமெயில் கணக்கானது இன்றியமையததாக உள்ளது. இந்த செயலியானது அனைத்து ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப்லெட்களிலும் தவறாமல் நிறுவப்பட்டிருக்கும் செயலியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு மேல் ஜிமெயில் கணக்குகள் வேலை செய்யாது என்ற தகவல் வெளியாகி வந்தது. தற்போது, அந்த தகவலுக்கு கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் ஜிமெயில் ஐடி செயல்படாது என வெளியான தகவலை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பரவிய தகவலால், ஜிமெயிலில் உள்ள தங்களது தகவல்கள் அனைத்து அழிந்துவிடுவோ என பயனர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. ஆனால், இது போலியான செய்தி என விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனம், பயனர்களின் மின்னஞ்சல் கணக்கு வழக்கம்போல செயல்படும் என அறிவித்துள்ளது.
No comments