Breaking News

ரெடியா? நோ எக்ஸாம்.. 8ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ போதும்.. புதுக்கோட்டையில் அசத்தலான அரசு பணி!

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள 49 பணியிடங்களை தேர்வின்றி நேர்க்காணல் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: சேர்சைட் அட்டென்டர் (Chairside Attender) பணிக்கு 10 பேர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தலா ஒருவர், ஸ்வீப்பர் மற்றும் ஸ்காவென்சர்ஸ் பணிக்கு 10 பேர், அட்டென்டன்ட்/அட்டென்டர் பணிக்கு 18 பேர், காவல் பணிக்கு 5 பேர், துறை செயலாளர் (Department Secretaries) பணிக்கு 4 பேர் என மொத்தம் 49 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: சேர்சைட் அட்டென்டர் பணிக்கு டிப்ளமோ நர்சிங், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருப்பதோடு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். வேண்டும். ஸ்வீப்பர் மற்றும் ஸ்காவென்சர்ஸ், காவலாளி பணிக்கு 8 ம் வகுப்பும், அட்டென்டன்ட்/அட்டென்டர் பணிக்கு 10ம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும். துறை செயலாளர் (Department Secretaries) பணிக்கு பட்டப்படிப்பு முடித்து கம்ப்யூட்டர், புள்ளியியல் அறிவு பெற்றிருப்பதோடு தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: சேர்சைட் அட்டென்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஸ்வீப்பர் மற்றும் ஸ்காவென்சர்ஸ், அட்டென்டன்ட்/அட்டென்டர், துறை செயலாளர் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். காவல் பணிக்கு 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12,480 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.17,430 வரை மாத சம்பளமாக கிடைக்கும். பணி வாரியாக பார்த்தால் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மாதம் ரூ.17430 சம்பளம் வழங்கப்படும். துறை செயலாளர் பணிக்கு மாதசம்பளமாக ரூ.14,430, சேர்சைட் அட்டென்டர், ஸ்வீப்பர் மற்றும் ஸ்காவென்சர்ஸ், அட்டென்டன்ட்/அட்டென்டர் பணிகளுக்கு மாதம் ரூ.12,480 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் pudukkottai.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு பிப்ரவரி 22ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை Appointments Committee, Government Dental Medical College Hospita, Mullur, Pudukkottai - 622 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

No comments