Breaking News

தேர்வு நேரம் - விடைத்தாளில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன?

1199115
 

பொதுத்தேர்வுக்கு படிப்படியாக எப்படி ஆயத்த wமாவது என்பதை கடந்த சில நாட்களாக பார்த்தோம். ஒட்டுமொத்த முயற்சி மற்றும் பயிற்சிக்கான பலன் தேர்வில் எப்படி விடையளிக்கிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது. ஆகையால் ‘தேர்வு நேரம்’ பகுதியில் நாம் இறுதியாக பார்க்கவிருப்பது, தேர்வு எழுதுபவர் விடைத்தாளில் செய்யக்கூடியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதேயாகும்.

செய்யக்கூடியவை

1. முகப்புச்சீட்டில் உரிய இடத்தில் கையொப்ப மிடவேண்டும்.

2. விடைத்தாளில் ஒரு பக்கத்திற்கு 20 முதல் 25 வரிகள்வரை எழுதவேண்டும்.

3. விடைத்தாளின் இருபுறங்களிலும் எழுத வேண்டும்.

4. செய்முறைகள் யாவும் விடைத்தாளின் கீழ்ப் பகுதியில் இடம்பெற வேண்டும்.

5. வினா எண் தவறாமல் எழுதவேண்டும்.

6. இருவிடைகளுக்கிடையே இடைவெளி விட்டு எழுதவேண்டும்.

7. விடைத்தாளில் நீலம், கருப்புமை கொண்ட பேனாவால் விடைகளை தெளிவாக எழுத வேண்டும்.

8. விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்கே கோடு இடவேண்டும்.

செய்யக்கூடாதவை

1. வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.

2. விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.

3. விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் பெயர் எழுதக் கூடாது.

4. வண்ணங்கள் கொண்ட பேனா / பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது.


5. விடைத்தாள் கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது.

6. விடைத்தாள் புத்தகத்தின் எந்த தாளையும் கிழிக்கவோ நீக்கவோ கூடாது.

எல்லாம் படித்திருப்பீர்கள், எல்லாமே தெரிந் திருக்கும். ஆனால், நிதானம் தவறிவிடுவீர்கள். சின்ன தவறாக இருக்கும் அதை அதுவரை செய்திருக்கவே மாட்டீர்கள். கடைசியில் பார்த்தால் அதுதான் கிடைக்கவேண்டிய மதிப்பெண்ணை இழக்க காரணமாகிவிடும். ஆகையால், மாண வர்களே விடைத்தாளில் பதில் எழுதும்போது நிதானம் மிகவும் அவசியம்.

வெற்றி பெற வாழ்த்துகள்!

- கட்டுரையாளர்: வே. போதுராசா, முதுகலை பட்டதாரி ஆசிரியர், தேனி; தொடர்புக்கு: pothurasav@gmail.com

No comments