Breaking News

ரெடியா மக்களே.! வாடகைக்கு வீடு வேண்டுமா..? தமிழக அரசின் மகிழ்ச்சியான செய்தி.!!

 


மிழக அரசின் வீட்டுவசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்டு காலியாக இருக்கும் குடியிருப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் வகையில் அமைச்சர் எஸ்.முத்துசாமி முக்கிய பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய, வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தமிழக அரசால் பல புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட 60 இடங்களில் உள்ள பத்தாயிரம் வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்தது. இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாது என்பதை உறுதி செய்து உரிய அனுமதி பெற்று அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன .

அந்த இடத்தில் புதிதாக கட்டம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும். இதே போல மாநிலத்தின் பல இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பலவும் காலியாக இருக்கிறது. அதற்கு எங்கெல்லாம் தேவைப்படுகிறது அங்கு தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. மூன்று ஆயிரம் வீடுகள் விற்காமல் இருக்கும் நிலையில் அவற்றை வாடகை வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

No comments