Breaking News

விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 பென்சன்.. பதிவு செய்வது எப்படி.? முழு விவரம் இதோ.!!

 

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி மந்தன் யோஜனா.

விவசாயிகள் ஓய்வு காலத்தில் தேவையான நிதி நிலமையோடு இருக்க தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 3000 ரூபாய் பென்ஷன் கிடைக்கிறது. அதே நேரத்தில் பதிவு செய்துள்ள விவசாய ஏதேனும் காரணத்தால் இறந்தால் அவருடைய மனைவிக்கு மாதம் 1500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு செல்போன் எண்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை ,வயது சான்றிதழ், வருமான சான்றிதழ், நில ஆவணங்கள் வங்கி புத்தகம் ஆகியவை வைத்திருக்க வேண்டும். இதற்கு முதலில் இந்த திட்டத்தின் அதிகாரபூர்வ் இணையதளத்திற்கு சென்று அதில் செல்போன் என்னை உள்ளிட வேண்டும் .அதன் பிறகு அதில் கேட்கப்படும் தேவையான தகவல்களை குறிப்பிட்ட இடத்தில் நிரப்ப வேண்டும். பின்னர் ஜெனரேட் ஓடிபி என்ற ஆப்ஷனை கிளிக் செய்வோம். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். இந்த செயல்முறைகள் அனைத்தையும் முடித்த பிறகு சப்மிட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

No comments