Breaking News

இது தெரியுமா ? காலை எழுந்ததும் காலியான வயிற்றில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால்...

முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும்.

முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். இதனால் பிற உணவுகளின் அளவு குறைகிறது என்ற அளவில் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும்.

காலை எழுந்ததும் காலியான வயிற்றில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சாப்பிடக்கூடிய உணவுகளின் அதிக கலோரிகளை கட்டுப்படுத்தலாம். கலோரிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் முட்டையில் இருக்கிறது.
ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

கொலஸ்ட்ரால் அளவு குறையும் : முட்டையில் கொழுப்புச்சத்து அதிகம் என்பதால் நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், இது தவறான கண்ணோட்டம் ஆகும். ஏனென்றால் முட்டையில் இருப்பது நல்ல கொழுப்புச் சத்து ஆகும். இதய நோய்களுக்கு இந்த கொழுப்பு காரணம் அல்ல. ஆகவே, காலை உணவாக தவறாமல் முட்டையை எடுத்துக் கொள்ளலாம்.

அவித்த முட்டை நல்லது : முட்டையை வெவ்வேறு வெரைட்டியில் சாப்பிடுவது உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கலாம். ஆம்லெட், ஆஃபாயில், புல்ஃபாயில் என்று ருசிகரமான வகைகள் பல இருந்தாலும், எந்த கலவையும் இல்லாத, ஆவியில் வேக வைக்கப்பட்ட முட்டை மிகவும் சத்து வாய்ந்தது ஆகும். வேண்டுமானால், அவித்த முட்டையை வெட்டி கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லேட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம்.

முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று இருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

ஒவ்வொரு மனிதனின் உடல் தேவை மற்றும் அவர்களுடைய ஆரோக்கிய நிலை ஆகியவற்றைப் பொருத்து எத்தனை முட்டை சாப்பிடலாம் என்ற எண்ணிக்கை மாறுபடுகிறது. எனினும், பிற பின்விளைவுகளை தவிர்க்க, சராசரியாக ஒரு நபர் நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை சாப்பிடலாம்.

No comments