Breaking News

புதிய SIM ரூல்ஸ்.. KYC ஆவணங்களில் மாற்றம்.. யாருக்கெல்லாம் பொருந்தும்.. என்னென்ன மாறப்போகிறது!

 


ந்தியாவில் சிம் கார்டு பெறுவதை எளிதாக்கும் நோக்குடன் மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்பு துறையானது, சிம் கார்டுகள் வழங்கும் (Issuing Mobile SIM) கேஓய்சி விதிமுறைகளை (KYC Rules) புதுப்பித்துள்ளது.

இந்த விதிமுறைகள் யாருக்கு பொருந்தும்? முழு விவரங்கள் இதோ.

ஜனவரி 1ஆம் தேதி முதல் சிம் கார்டு தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதில், சிம் கார்டு பெறும் வாடிக்கையாளரின் பயோமெட்ரிக் விவரங்கள் சரிபார்ப்பது முதல் கேஓய்சி அப்டேட் வரையில் பல்வேறு புதிய விதிகள் கட்டாயமாக்கப்பட்டன. போலி சிம் கார்டு விவகாரங்களில் சிக்கினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்படும்.

அதேபோல ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்ட கடுமையான விதிகளும் அதில் அடங்கி இருக்கின்றன. இந்த சூழலில் நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கான சிம் கார்டு விதிகளில் (SIM Cards Rules) முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்திலும் சிம் வாங்கும் பயணிகளுக்கும் பொருந்தும்.

புதிய கேஓய்சி விதிமுறைகள் (New KYC Rules): நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்பவர்கள், இந்த நாட்டின் சிம் கார்டை (Indian SIM Card) பெறுவதற்கு தேவையான கேஓய்சி ஆவணங்களாக (KYC Documents) பின்வரும் ஆவணங்களை பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக (Alternative Passport) பயன்படுத்தி கொள்ளலாம்.

நேபாளம், பூட்டான் குடியுரிமைச் சான்றிதழ் (Nepalese Bhutanese Citizenship Certificate) வழங்கலாம். நேபாளம் மற்றும் பூடான் தேர்தல் ஆணையங்களால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை (Voter Identification Card) வழங்கலாம். அதே போல லிமிடெட் வேலிடிட்டி போட்டோ-ஐடென்டிட்டி சர்டிபிகேட் (Limited Validity Photo-identity Certificate) கொடுக்கலாம்.

இந்த சர்டிபிகேட்டானது, ராயல் பூட்டான் தூதரகம் (Royal Bhutanese Embassy) மற்றும் நேபாளம் தூதரகம் (Nepal Embassy) ஆகிவற்றால், அந்நாட்டு குடிமக்களுக்கு இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஒருவேளை, நேபாளம் மற்றும் பூடான் நாட்டவர்கள் வேறு ஏதேனும் நாட்டிலிருந்து, இந்தியாவுக்கு வந்தால், அவர்களுக்கும் கூடுதல் விதமுறைகள் இருக்கின்றன.

அதாவது, அவர்களது செல்லுபடியாகும் விசா முத்திரை (Valid Visa Stamp) மற்றும் பாஸ்போர்ட்டின் நகலை (Passport Copy) சிம் கார்டு கேஓய்சி ஆவணங்களாக வழங்க வேண்டும். இது போன்ற ஆவணங்களை வைத்து சிம் கார்டு பெற்ற பிறகு சிம் ஆப்பரேட்டர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

ஆகவே, தொலைத்தொடர்பு துறையின் (Department of Telecommunications) விதிமுறைகளின்படி, நேபாளம், பூட்டான் குடிமக்கள் இந்தியாவில் சிம் கார்டு கனெக்சன் பெற்று கொண்ட பிறகு அவர்கள் இங்கு தங்க அனுமதிக்கப்பட்ட காலம் அல்லது அவர்களது விசாவின் வேலிடிட்டி வரையில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட வேண்டும். இந்த சேவைகள் 3 மாதங்களுக்கு மேல் வழங்கப்பட கூடாது.

இது இந்தியாவில் 3 மாதங்களுக்கு மேல் தங்க அனுமதிக்கப்பட்ட நேபாளம், பூட்டான் குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும். ஆகவே, சர்வதேச ரோமிங் சேவையானது, 3 மாதங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமுறைகளையே மத்திய அரசு சிம் கார்டு கேஓய்சியில் (SIM Card KYC) புதுப்பித்துள்ளது. வரும் காலங்களில், இந்த விதிமுறைகளே பின்பற்றப்பட இருக்கிறது.

No comments