Breaking News

குறைந்த சம்பளம் வாங்குறவங்களும் இனி கார் வாங்கலாம்! இந்த ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க!

 


ன்று மார்க்கெட்டில் ஏராளமான கார்கள் விற்பனைக்கு வருகின்றன. ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு விதமான விலை இருக்கிறது.

உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப நீங்கள் காரை தேர்வு செய்து வாங்க முடியும். இன்று இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு தான் அதிகமான டிமாண்ட் இருக்கிறது. ஆனால் குறைந்த சம்பளம் வாங்கும் நபர்களுக்கு கார் என்பது இன்றும் பெரும் கனவாக தான் இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் கார் வாங்குவது என்பது சற்றுச் சுலபமான விஷயம் தான் . அனைத்து விதமான விலைகளிலும் கார்கள் விற்பனைக்கு உள்ளன. என்ட்ரி லெவல் கார்களிலேயே ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. இதனால் சாதாரண மனிதர்கள் அவர்களது கார் கனவை நினைவாக்கும் தருணமாக இந்த காலகட்டம் இருக்கிறது. இப்படியாக குறைந்த விலை கார் ஒன்றை பற்றி தான் நாம் இங்கு காணப் போகிறோம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் க்விட் என்ற காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த காரே அந்நிறுவனத்தின் குறைந்த விலை காராகும். இந்த கார் அதன் போட்டிக் காரான மாருதி நிறுவனத்தின் ஆல்டோ காரை விட டிசைனில் சிறப்பான அம்சம் பெற்ற காராக இருக்கிறது. இந்த கார் குறித்த முழுமையான விவரங்களை காணலாம்.

ரெனால்ட் க்விட் கார் இதற்கு முன்னர் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனையாகி வந்தது. தற்போது ரெனால்ட் நிறுவனம் 0.8 லிட்டர் என்ற இன்ஜினை நிறுத்திவிட்டது. தற்போது இந்த கார் 1.0 லிட்டர் என்ற ஒரே இன்ஜின் ஆப்ஷன் மட்டும் தான் விற்பனைக்கு வருகிறது.


இந்த கார் 67.06பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 21 முதல் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இந்திய சட்டத்திற்கு ஏற்றவாறு குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் உள்ள காராக இருக்கிறது.

இந்த காரில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன்பக்கம் இரண்டு ஏர் பேக்குகள் ஆகியவை முக்கியமான அம்சமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், சீல்டு பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், ஸ்பீட் அலர்ட், ஸ்பீட் சென்சிங் டோர் லாக், சீட் பெல்ட் லோடு லிமிடர், பெல்ட் ப்ரீடென்ஷனர் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த காரின் விலையை பொறுத்தவரை ரூபாய் 4.7 லட்சம் முதல் ரூபாய் 6.32 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் நான்கு விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல் (ஓ), ஆர்எக்ஸ்டி மற்றும் கேலிபர் ஆகிய வேரியன்டுகளில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.

இதில் பேசிக் வேரியன்டான ஆர்எக்ஸ்இ என்ற வேரியன்ட் காரை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் இதன் ஆன்ரோடு விலை ரூ5.30 லட்சம் ஆகும். இதை நீங்கள் ரூ50,000 முன்பு கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் பாக்கியுள்ள ரூ4.80 லட்சத்திற்கு நீங்கள் லோன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதற்கு ஆண்டிற்கு 9.8% வட்டியுடன் 7 ஆண்டுகளில் நீங்கள் அதை திருப்பி செலுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ7920 நீங்கள் இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

இப்படியாக நீங்கள் செலுத்தினால் 7 ஆண்டுகளில் மொத்தம் இந்த காருக்காக நீங்கள் 6,65,250 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள். காரின் விலையை விட சுமார் 1.35 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டியது இருக்கும். ஆனால் காரை நீங்கள் ஏழு ஆண்டுகள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் இந்த காரை பயன்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க்க கருத்து: மாதம் 7920 என்ற இஎம்ஐ ஆப்ஷன் என்பது ரூபாய் 40 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு நபருக்கு செலுத்தக் கூடிய அளவிலான ஒரு தொகை தான். இதனால் ரூபாய் 40 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்களும் இந்த காரை தாராளமாக துணிந்து வாங்கலாம். அவர்களுக்கு மற்ற எந்த கடன்களும் இல்லாத பட்சத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த கார் உதவியாக இருக்கும்.

No comments