Breaking News

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி: இந்த 5 வங்கிகளை பாருங்க

 


Fixed Deposits | ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் எனப்படும் சிறு நிதி வங்கிகள் (SFBs) பெரும்பாலும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குவதை விட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FDs) அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

அதாவது, இந்த சிறு நிதி வங்கிகளில் FDகளுக்கான வட்டி விகிதம் பொதுவாக 8 முதல் 8.5% வரை உள்ளன.

1) ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 3.75% முதல் 8% வரையிலான FD வட்டி விகிதங்களை 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொதுக் குடிமக்களுக்கு வழங்குகிறது.
18 மாதங்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 8% வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜனவரி 24, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

2) ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது, பொதுக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் காலங்களுக்கு 3.5% முதல் 8.50% வரையிலான எஃப்.டி வட்டி விகிதங்களை வழங்குகிறது.
444 நாள்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 8.50% வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 21, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

3) இஏஎஸ்எஃப் (ESAF) ஸ்மால் ஃபைனான்ஸ்

இஏஎஸ்எஃப் (ESAF) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 4% முதல் 8.25% வரையிலான எஃப்.டி வட்டி விகிதங்களை 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொதுக் குடிமக்களுக்கு வழங்குகிறது.
இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் எஃப்.டி-க்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 8.25% வழங்கப்படுகிறது. இந்த எஃப்.டி வட்டி விகிதங்கள் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

4) ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ்

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் (Fincare Small Finance) வங்கியானது 3% முதல் 8.61% வரையிலான எஃப்.டி வட்டி விகிதங்களை 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொதுக் குடிமக்களுக்கு வழங்குகிறது.
750 நாள்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 8.61% வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 28, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

5) யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 4.50% முதல் 9% வரையிலான எஃப்.டி வட்டி விகிதங்களை 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொதுக் குடிமக்களுக்கு வழங்குகிறது. 1001 நாள்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9% வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 9, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

சிறு நிதி வங்கிகளில் உள்ள வைப்புத்தொகைகள், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (DICGC) வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

No comments