Breaking News

ஆட்டம் காட்ட போகுது தங்கம் விலை.. இனி இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது.. சொல்வது ஆனந்த் சீனிவாசன்:

 

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

"தங்கம்.." நமது நாட்டில் சேமிப்பு என்று வரும் போது இதுதான் மிகவும் முக்கியமான சொல்லாக இருக்கிறது. ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் சேமிப்பை எப்போதும் தங்கத்தில் தான் மேற்கொள்வார்கள்.

தங்கத்தை நாம் எமோஷ்னலாக பார்ப்பதே இதற்குக் காரணம். அதேநேரம் இது நமக்கு நல்லதும் செய்துள்ளது. ஏனென்றால் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தங்கத்தைப் போல ரிஸ்க் இல்லாத முதலீடு வேறு எதிலும் கிடைத்ததே இல்லை.

தங்கம்: மேலும் கடந்த காலங்களின் டேட்டாவை எடுத்துப் பார்த்தாலும் நமக்கு ஒரு விஷயம் மிகவும் தெள்ள தெளிவாகவே தெரியும். அதாவது நீண்ட கால நோக்கில் நாம் பார்க்கும் போது தங்கம் விலை எப்போதும் குறைந்ததே இல்லை. தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. அதிலும் குறிப்பாக போர் அல்லது பெருந்தொற்று போன்ற பேரழிவு ஏற்படும் சமயங்களில் தங்கம் விலை பட்டென எகிறியிருக்கிறது.

கொரோனா காலத்தில் தங்கம் விலை சட்டென எகிறியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். கொரோனாவுக்கு முன்பு சுமார் ரூ. 4000 என்ற ரேஞ்சில் இருந்த தங்கம் அதன் பிறகு சர்ரென எகிறி உச்சம் தொட்டது. அதன் பிறகு இப்போது தான் கடந்த சில காலமாகத் தங்கம் விலை ஓரளவுக்கு நிலையாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை இப்போது எப்படி இருக்கிறது. வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "தங்கம் வாங்க இதை விடச் சிறந்த வாய்ப்பு கிடைக்காது.. தங்கம் வாங்க வேண்டும் என நினைப்போர் இப்போது வாங்கினால் சரியாக இருக்கும். விலை இறங்க இறங்கக் கூடுதலாகத் தங்கத்தை வாங்குகள். அடுத்த 15 மாதங்களில் ஒரு கிராம் தங்கம் 7000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை நிச்சயம் செல்லும்.

தங்கம் விலை லேசாக ஏறவும் இறங்கவும் செய்யும். ஆனால், பெரியளவில் விலையில் மாற்றம் இருக்காது. எப்போது அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கிறதோ அப்போது தங்கம் விலை எகிற ஆரம்பிக்கும். அதன் பிறகே தங்கம் விலையில் உண்மையான ஏற்றம் இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை அதிகரிக்க என்ன காரணம்: தங்கம் விலை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாகப் போர், பெருந்தொற்று உள்ளிட்ட காலங்களில் தங்கம் விலை சட்டென எகிறும். கொரோனா காலத்தில் தங்கம் விலை அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாகும். அதேபோல அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் தங்கம் விலை அதிகரிக்கும். அமெரிக்க மத்திய வங்கி கடந்த சில ஆண்டுகளாகப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை அதிகரித்தது.

இதனால் கடந்த சில காலமாகத் தங்கம் விலை கட்டுக்குள் இருந்தது. வரும் காலங்களில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கம் விலை விரைவில் அதிகரிக்கும். இதையே தான் ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகிறார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

No comments