ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்வது யார்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
25 மாநிலங்களைச் சேர்ந்த 35,000 நபர்களிடம் ஆய்வு நடத்தி அவர்கள் அளித்த விவரங்களை உள்ளடக்கிய இந்த ஆன்லைன் ஆய்வில், ஆண்கள் சராசரியாக 2,484 ரூபாயை ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக செலவிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது, இது பெண்கள் செலவிடும் 1,830 ரூபாயை விட 36% அதிகம்.
'சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் நுகர்வோர்: இந்தியப் பார்வை' என்ற தலைப்பில் ஐஐஎம்ஏவின் டிஜிட்டல் மாற்றத்துக்கான மையம் (சிடிடி) வெளியிட்ட கட்டுரையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கட்டுரையில், 47% ஆண்கள் மற்றும் 58% பெண்கள் ஃபேஷன் ஆடைகளுக்காக ஷாப்பிங் செய்துள்ளனர் என்றும், 23% ஆண்களும் 16% பெண்களும் மின்னணு சாதனங்களுக்காக ஷாப்பிங் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி, சென்னை, மும்பை போன்ற முதல்தர நகரங்களை ஒப்பிடும்போது, ஜெய்ப்பூர், லக்னெள, நாக்பூர், கொச்சி போன்ற இரண்டாம் தர நகரங்களில் உள்ள நுகர்வோர் ஃபேஷன் ஆடைகளுக்கு 63% அதிகமாகவும் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு 21% அதிகமாகவும் செலவு செய்கின்றனர்.
"ஃபேஷன் பொருள்கள் மற்றும் ஆடைகளுக்காகவே ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில், இரண்டாம் தர நகரங்களில் உள்ள நுகர்வோர் அதிகமாக செலவு செய்துள்ளனர். எனினும், பிரத்யேக ஷாப்பிங்கில் ஈடுபடும் நுகர்வோரில் மூன்றாம் மற்றும் முதல் தர நகரங்களில் இருப்பவர்களே முதலிடம் பிடிக்கிறார்கள்" என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், ஆன்லைன் ஷாப்பிங்கில், முதல் தர நகரத்தில் உள்ள நுகர்வோர் செலவழித்த ரூ. 1,119 உடன் ஒப்பிடுகையில், 2, 3, நான்காம் தர நகரத்தில் உள்ள நுகர்வோர் முறையே ரூ. 1,870, ரூ. 1,448 மற்றும் ரூ. 2,034 செலவு செய்துள்ளனர்.
கேஷ் ஆன் டெலிவரி என்ற பணம் செலுத்தும் முறையில்தான், 87% ஃபேஷன் மற்றும் ஆடைகள் சம்ப்ந்தப்பட்ட பொருள்களை நுகர்வோர் வாங்கியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments