ஸ்மார்ட்போனில் படிக்கும் பழக்கம் உடையவரா..?ரீடிங் மோட் பற்றி தெரியுமா?
புத்தகங்கள்
வாசிப்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் இந்த தொழில்நுட்ப
யுகத்தில் நிச்சயமாக நீங்கள் புத்தகங்களை வாசிப்பதற்கு உங்களது
ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள்.
விமானத்தில் பயணிக்கும்பொழுது, வீட்டில் இருக்கும் பொழுதோ அல்லது
அலுவலகத்தில் அலுப்பு தட்டும்போது எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள்
புத்தகங்களை வாசிக்கலாம். ஆனால் எல்லா வெப்சைட்டும் உங்களுக்கு ஒரு
அற்புதமான வாசிக்கும் அனுபவத்தை தந்து விடாது. அத்தகைய தடையில்லாத வாசிப்பு
அனுபவத்தை பெறுவதற்கு உங்களது ஆண்ட்ராய்டு போனில் நீங்கள் ரீடிங் மோடை
எனேபிள் செய்ய வேண்டும். இது விளம்பரங்களை தடை செய்து எழுத்துக்களை
நேர்த்தியான முறையில் படிப்பதற்கு ஏற்றவாறு உங்களுக்கு அமைத்து தரும்.
ஸ்கிரீன் வாசிப்பு அனுபவத்தை தனித்துவமாக மாற்றுவதற்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ரீடிங் மோடு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் புத்தகத்தில் உள்ள உள்ளடக்கத்தை பாதிக்காமல் அதன் நிறம், எழுத்துக்களின் அளவு போன்றவற்றை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மாறாக உள்ளடக்கத்தை செவி வழியாக கேட்பதற்கு ரீட் அலௌடு (Read aloud) கருவையும் யூசர் பயன்படுத்தலாம்.
ரீடிங் மோடை பயன்படுத்துவது எப்படி?
தடையில்லாத வாசிப்பு அனுபவத்தை உங்களது ஸ்மார்ட்போனில் பெறுவதற்கு பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்:
- உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் அப்ளிகேஷனை திறக்கவும்.
- சர்ச் பாரில் "Reading mode" என்று டைப் செய்யுங்கள்.
- Reading Mode அப்ளிகேஷனை தேர்வு செய்து, அதனை இன்ஸ்டால் செய்யவும்.
- Reading Mode அப்ளிகேஷனை திறக்கவும்.
- டுடோரியலில் கொடுக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றவும்.
இப்பொழுது நீங்கள் Accessibility Settings மெனுவிற்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள்.
ரீடிங் மோடை தேர்வு செய்யவும்.
ரீடிங் மோடு ஷார்ட் கட்டை ஆன் செய்யுங்கள்.
ரீடிங் மோடு அனுமதிகளை வழங்குவதற்கு 'allow' என்பதை தட்டவும்.
இந்த சிறப்பு ரீடிங் மோடு அம்சத்தை பயன்படுத்துவதற்கு உங்களது ஆண்ட்ராய்டு 9 அல்லது அதற்கும் அதிகமான வெர்ஷனில் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அம்சம் இப்போதைக்கு ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே கிடைக்கிறது. ரீடிங் மோடு அப்ளிகேஷனில் மிக சமீபத்திய வெர்ஷனை டவுன்லோட் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் செட்டிங்ஸ் அடிப்படையில் இந்த அப்ளிகேஷன் ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆகிவிடும்; எனினும் யூசர் அப்டேட்டுகள் ஏதேனும் தேவைப்படுமா என்பதை Google Play store-ல் மேனுவலாக சென்றும் தெரிந்து கொள்ளலாம்.
இப்போதைக்கு இந்த அம்சத்தை நீங்கள் PDF ஃபைல்கள், இமெயில்கள், சாட் மெசேஜ்கள் அல்லது சோஷியல் மீடியா ஃபீடுகளில் பயன்படுத்த முடியாது. ஒருவேளை ரீடிங் மோடு அம்சமானது உள்ளடக்கத்தை சத்தமாக வாசிக்க தவறினால் உங்களது சாதனம் கூகுள் ஸ்பீச் சேவைகளின் சமீபத்திய வெர்ஷன் இன்ஸ்டால் ஆகி உள்ளதா என்பதை நீங்கள் சரி பார்க்க வேண்டும். இல்லையெனில் கூகுள் பிளே மூலமாக யூசர் அதனை அப்கிரேட் செய்யலாம் அல்லது சமீபத்திய ஸ்பீச் சேவைகளை இன்ஸ்டால் செய்யலாம்.

No comments