Breaking News

எவ்வளவு அழகா இருந்தாலும் சாப்பிடமாட்டேன் போ! கத்தரிக்காயுடன் ஊடல் கொள்ளும் நோய்கள்!

 

த்தரிக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, பலருக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய், சிலருக்கு மட்டும் எதிரியாக மாறுகிறது.

இந்திய சமையலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கத்தரிக்காய், நமது அன்றாட உணவில் ஒன்றாகிவிட்டது. கத்தரியின் நிறமும், மணமும், சுவையும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், அதன் ஊட்டச்சத்துக்கள், மருத்துவர்களையும் அசர வைப்பவை.

அதனால் தான், கத்தரிக்காயில் காணப்படும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை பெறுவதற்காக குறைந்தபட்சம் வாரத்தில் 2 நாட்களாகவது சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். போட்டோ நியூட்ரியெண்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும்
புற்றுநோய் வராமல் காக்கும் கத்தரிக்காயில் வைட்டமின் 'பி' போதுமான அளவில் உள்ளது. இது இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

கருநீலம், இளம்பச்சை, வெண்மை என பல நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது. உருண்டை, நீள் உருண்டை என பலா வடிவங்களில் உற்பத்தியாகும் கத்தரிகாய்களில் சிறிதளவு கசப்பு இருக்கும். கத்தரிக்காயின் தோல், சதை, விதை என முற்றாத அனைத்து பகுதிகளுமே உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

எந்தவொரு விஷயத்திற்கும் இரு பகுதிகள் இருப்பதுப்போல, பெரும்பாலானவர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் கத்தரிக்காய், சிலருக்கு மட்டும் நஞ்சாக மாறுகிறது.

கத்தரிக்காயை உட்கொள்வது சில நோய்களை மேலும் மோசமாக்கும். அதேபோல சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எந்தெந்த நபர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

எலும்பு பலவீனம்
எலும்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. உண்மையில், கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட், கால்சியத்தை உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது. இது எலும்புகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனபதால், எலும்பு பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிட வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

மூட்டுவலி நோயாளிகள்
மூட்டுவலி நோயாளிகள் அல்லது முழங்கால் வலியால் அவதிப்படுபவர்களும் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. உடலில் வாத தோஷத்தை அதிகரிக்கும் கத்தரிக்காய், மூட்டுகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது இதனால், கத்தரிக்காய் சாப்பிடும்போது உங்கள் மூட்டுகளில் வலி அதிகரிக்கும்.

சிறுநீரகக் கற்கள்
கத்தரிக்காயை உட்கொள்வது சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். கத்தரிக்காயில் உள்ள விதைகள் சிறுநீரக கற்கள் உருவாவதற்கு ஒரு காரணமாகும், எனவே அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பைல்ஸ் நோயாளிகள்
பைல்ஸ் எனப்படும் மூலநோய் உள்ளவர்களும் கத்தரிக்காயை உட்கொள்ளக்கூடாது. கத்தரிக்காயை சாப்பிடுவது பைல்ஸ் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும்.

No comments