Breaking News

செல்வமகள் சேமிப்பு திட்டம்.. இதை விட்றாதீங்க, கணக்கு முடங்கிடும்.. அசத்தும் சுகன்யா சும்ரித்தி யோஜனா

 


சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில், 3 வெவ்வேறு விதமான நிலைகளில் வரி விலக்கு கிடைக்கிறது. என்னென்ன தெரியுமா?

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்று சொல்லப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் கடந்த 2015ல் பிரதமர் மோடி, தொடங்கி வைத்த திட்டம் இதுவாகும். பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் என்பதுடன், அதிக வட்டி வழங்கப்படும் திட்டமுமாகும்.

பேராதரவு: அதனால்தான், வாடிக்கையாளர்களின் ஆதரவை இந்த திட்டம் தொடர்ந்து பெற்று வருகிறது. மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை., ஒரு வருடத்துக்கு மொத்தமாகவும் செலுத்தலாம் என்பது ஹைலைட்டான விஷயம்.

வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, இந்த கணக்கை ஆரம்பிக்கலாம்.. அதிகபட்சமாக ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது, கணக்கு தொடங்கப்பட்ட அன்றிலிருந்து 21 வருடங்களில் நிறைவு பெறும். நீங்கள் கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை செலுத்த முடியும்..

கல்வி செலவு: பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். இரண்டாவது, பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்கக்கூடாது. அதாவது, குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம்.

ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும். ஒருவேளை இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் என்றால், அவர்களுக்கென்றே விதி விலக்கு உண்டு. பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம்.

நிதியாண்டு: சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாய். அதாவது கணக்கை செயலில் வைத்திருக்க ஒரு நிதியாண்டில் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டிலும் இந்தத் அளவிற்கு திட்டத்தில் முதலீடு செய்யாவிட்டால், கணக்கு மூடப்படும். கணக்கை மீண்டும் செயல்படுத்த, கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிற.. இந்த திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். வருடத்துக்கு குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்ய வேண்டும். மகளுக்கு 18 வயது முடிந்ததுமே மொத்தப்பணத்தில் 50 சதவீதத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

3 வித வரிகள்: இதில் இன்னொரு ஹைலைட் உள்ளது.. வருமான வரியில் இருந்து முழுமையாக விலக்கு கிடைக்கும் திட்டம் இதுவாகும்.. மொத்தம் 3 வெவ்வேறு நிலைகளில் அதாவது EEEல் வரி விலக்கு கிடைக்கிறது. முதலாவதாக, வருமான வரிச்சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வருடாந்திர முதலீட்டுக்கு விலக்கு. அடுத்ததாக, அதிலிருந்து பெறப்படும் வருமானத்திற்கு வரி கிடையாது. மூன்றாவதாக, முதிர்வின்போது பெறப்படும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகளில் வருகிற மார்ச் 31, 2024 வரை கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்ச அளவிலான முதலீட்டை வருடந்தோறும் செய்து, இருப்பை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இல்லாவிட்டால், உங்களது கணக்கு செயலிழந்து போகலாம்... ஒருவேளை செயலற்று போய்விட்டால், மறுபடியும் கணக்கை தொடங்க, கணக்கு வைத்திருப்பவர் அபராதம் செலுத்த வேண்டியிருக்குமாம்.

சேமிப்பு: சமீபத்தில் ஒரு சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின்கீழ் சேமிப்பை ஆரம்பிப்போருக்கு, 8.0 சதவிகிதம் வட்டி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 0.2 சதவிகிதம் உயர்த்தி, அதாவது 8.2 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

இதன் மூலம் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.5,70,205ஐ பெற முடியும். இத்தனை சிறப்புகளை உடையதால்தான், பொதுமக்கள் இந்த செல்வமகள் திட்டத்துக்கு தொடர்ந்து பேராதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.

எங்கே துவங்குவது : போஸ்ட் ஆபீஸ்களில் செல்வமகள் திட்ட கணக்கினை நீங்கள் தொடங்கலாம்.. அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம். அல்லது ஆன்லைன் மூலமாகவும் ஆக்டிவேட் செய்ய முடியும். இதுதவிர பொதுத்துறை வங்கிகளான SBI போன்ற வங்கிகளின் வெப்சைட்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK போன்ற வெப்சைட்களில் இருந்தும் பெறலாம்.

என்னதான் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் கூட அங்குள்ள கிராமங்களில் மக்கள்தொகை ரொம்பவே குறைவாகவே இருக்கிறது. யாரும் அங்குள்ள கிராமங்களில் செட்டிலாக விரும்புவதில்லை.இதுவே பிரச்சினைக்கான முக்கிய காரணம்.

இதற்காக ஜப்பான் அரசே ஊக்கத்தொகை கொடுத்து இந்த கிராமங்களில் சென்று செட்டில் ஆகுங்கள்.. குழந்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றாலும் அதற்குப் பலன் இருப்பதில்லை. மக்கள்தொகை தொடர்ந்து சரிந்தே வருகிறது. இதன் காரணமாகவே இப்போது இந்த பல ஆயிரம் ஆண்டு பாரம்பரிய நிர்வாண திருவிழாவும் முடிவுக்கு வந்துள்ளது.

No comments