TNHRCE Recruitment: இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? ரூ.45,000/- ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் - பணிகளுக்கு இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
- துணை ஆசிரியர்கள்
- சுவடியியல் வல்லுநர்
- கணினி வல்லுநர்
- தொழில்நுட்ப வல்லுநர் / மின்படியாக்கப் பணியாளர் (மின்படியாக்கம்)
- தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர்
- மரபு ஓவிய புணரமைப்பாளர்
- ஆய்வு கூட உதவியாளர்
- ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- துணை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.ஏ. தமிழ் / இதழியல் / தொல்லியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சுவடியில் வல்லுநர் பணிக்கு தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டமும் ஓலைச்சுவடிப் பட்டயச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். சுவடி நூலாக்கப் பணியில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
- கணினி வல்லுநர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது ஓராண்டு சுவடியியல் படடயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். DTP மற்றும் Indesign / Photoshop தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- தொழில்நுட்ப வல்லுநர் / மின்படியாக்கப் பணியாளர் பணிக்கு கணினி பாடப்பிரிவில் இளம் அறிவியல் பட்டம் / ஊடகம் மற்றும் காட்சி தொடர்பியல் ஓராண்டு சுவடியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மின்படியாக்கத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் தொல்லியல் /மரபு ஓவியங்கள் புனரமைப்பு ஓவிய பாதுகாப்பு விதிகளைத் தெரிந்த முனைவர் பட்டம் பெற்ற தொல்லியல் துறை / பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஓய்வு ப்ற்ற ஆசிரியர் அல்லது அயற்பணியில் அழைத்தல் ..4
- மரபு ஓவிய புணரமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க முதுகலை நுண்கலைப் பட்டப்படிப்பு அத்துட்டன் காட்சியகப் படுப்பு / புனரமைப்பு மற்றும் ஓவியங்கள் மற்றும் NRLC 2பயிற்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
- ஆய்வு கூட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் +2 வகுப்பில் அறிவியல் பாடத்தில் 60% விழுக்காடு எழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆய்வு கூடத்தில் வேதியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் பணிக்கு மரபுமுறைப்படி ஆய்வகப் பொருட்களை சுத்தம் செய்யும் அனுபவம் மிக்க மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்.
ஊதிய விவரம்
- துணை ஆசிரியர் - ரூ.45,000/-
- சுவடியியல் வல்லுநர் - ரூ.40,000/-
- கணினி வல்லுநர் - ரூ.30,000/-
- தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.25,000/-
- தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் - ரூ.40,000/-
- மரபு ஓவிய புணரமைப்பாளர் - ரூ.35,000/-
- ஆய்வு கூட உதவியாளர் - ரூ.20,000/-
- ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் - ரூ.15,000/-
விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயவிவர குறிப்பு தேவையான சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
போஸ்ட் பாக்ஸ் எண்- 3304
The Post Master,
Nungabankkam MDO,
Habibulla Road, (T.Nagar North Post Office Upstairs)
Nungabakkam,
Chennai - 600 034
அலுவலக தொடர்புக்கு..
ச.முருகன்,
கண்காணிப்பாளர்,
ஆணையர் அலுவலகம்,
'டபுள்யு பிரிவு'
கைபேசி எண் - 8678900480
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/182/document_1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.03.2024
No comments