BREAKING: ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு.!!!
பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி அரசாணை ஆணை வெளியிடபட்டுள்ளது.
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கும் விரிவுபடுத்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அரசாணையில்;
பள்ளிக் கல்வி – பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில்
அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில்
நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச
வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட
அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும்
தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு
மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கும் விரிவுபடுத்துதல் ஆணை
வெளியிடப்படுகிறது.
மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், பள்ளிக் கல்வித் துறையின் கீழுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு சார்ந்து, மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் மறுவெளியீடு செய்து வெளியிடப்பட்ட முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு விதிகள் முறையே விதி எண்.6(a), விதி எண்.5 மற்றும் விதி எண்.6இல் தெரிவிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2.
மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட செய்தி வெளியீட்டில் முதலமைச்சர்
09.01.2024 அன்று நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக்
கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள் :-
“பள்ளிக்
கல்வித் துறையில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது
வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும்
நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசின்
நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான
சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.”
3. மேலே ஆறாவதாகப் படிக்கப்பட்ட
பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட
தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய தமிழ்நாடு
தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள் ஆகியவற்றில் தனியார்
பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணி
நிபந்தனைகள், தகுதிகள் உள்ளிட்டவை குறித்து விதிகள் வகுக்கும் அதிகாரம்
அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில்
பள்ளிக் கல்வித் துறையின் கீழுள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நேரடி
நியமனத்திற்கு உச்ச வயது வரம்பு மாற்றியமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து, அதே நடைமுறையினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்து,
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை /
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள்
ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ்
அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி
நியமனங்களுக்கு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58
எனவும் உச்ச வயது வரம்பு நிர்ணயித்து ஆணை வழங்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
4.
முதலமைச்சர் அவர்கள் 09.01.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பினை
செயல்படுத்தும் விதமாக, பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன்
ஆய்வு செய்து, மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட
அரசாணையில் பள்ளிக்
கல்வித் துறையின்கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள்
நேரடி நியமனத்திற்கான 28 வயது வரம்பு மாற்றியமைக்கப்பட்டு
ஆணையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட அரசு
நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும்
தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு
மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பினை பொதுப்
பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை
வெளியிடலாம் என முடிவு செய்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என
தெரிவிக்கபட்டுள்ளது.
No comments