Breaking News

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களே இந்த பதிவு உங்களுக்கு .. இளம் விஞ்ஞானி திட்டத்தில் சேர விருப்பமா? - வெளியான அதிகார பூர்வா தகவல்.!


ஸ்ரோ நிறுவனம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் 2024 திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.

அதில், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை:-

மாணவர்கள் jigyasa.iirs.gov.in/registration என்ற இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களுக்கான பயனாளர் ஐடி உருவாக்கிய பின்னர் நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட லிங்கை கிளிக் செய்து இஸ்ரோ இணையதளத்தில் லாக் இன் செய்யவும்.

இதைத் தொடர்ந்து, ​​'விண்வெளி வினாடி வினா போட்டியில் பங்கேற்பு' என்பதைக் கிளிக் செய்து திட்டத்தில் செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் படித்து தெரிந்து கொள்ளவும். இதைஎடுத்து மாணவர்களின் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்கள், அவரது கல்வி விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்பிப்போரின் தகுதிகள்:-

இந்தியாவில் பிறந்து தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் 8-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண், ஆன்லைன் வினாடி வினாவில் அவர்களது செயல் திறன், கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டது, விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களுக்குள் வெற்றி பெற்றது ஒலிம்பியாட் தேர்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்றது சாரணர் இயக்கம் என்சிசி மற்றும் என்எஸ்ஸ் உள்ளிட்ட குழுக்களில் கடந்த மூன்று ஆண்டுகள் பங்கேற்றது மற்றும் கிராமப்புற பஞ்சாயத்து பள்ளிகளிலும் அரசு பள்ளிகளில் படித்திருத்தல் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

No comments