வங்கி கணக்கு மெசேஜ் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி. மக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை.!!!
இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மூலம் மோசடிகள் நடைபெறுகிறது. சென்னையில் சமீபத்தில் 34 வயதான நபர் ஒருவரின் செல்போனுக்கு எஸ் பி ஐ வங்கியில் இருந்து வருவது போல மெசேஜ் வந்தது. அதில் உங்களுடைய வங்கி கணக்குக்கு ரிவார்டு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைன் மூலம் கேட்கப்பட்டன. பிறகு செல்போனுக்கு ஓடிபி வர அவருடைய வங்கி கணக்கில் இருந்து 44,000 எடுக்கப்பட்டுள்ளது. உடனே அவர் பதறி கொண்டு வங்கியை தொடர்பு கொள்ள மோசடி செய்யப்பட்டுள்ளது உறுதியானது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments