Breaking News

வங்கி விடுமுறை.. பேங்க் போறீங்களா? அப்ப இந்த லிஸ்ட் கொஞ்சம் பார்த்துடுங்க.. ரிசர்வ் வங்கியின் அதிரடி

 

வங்கி விடுமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், அது தொடர்பான லிஸ்ட்டையும் வெளியிட்டிருக்கிறது.

நம்முடைய பணத்தேவையை பூர்த்தி செய்யும் இடமாக வங்கிகள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனைகளுக்காகவும், வங்கிகள் நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.

வங்கிகள்: அதனால்தான், வங்கி விடுமுறைகளை நாம் அறிந்து வைத்து கொள்ள வேண்டியிருக்கிறது.. வங்கிகள் விடுமுறையில் சிலவற்றை மட்டும் அரசாங்கம் நிர்ணயித்து வருகிறது. அதேபோல, இந்தியா முழுவதுமுள்ள வங்கிகள் தேசிய விடுமுறை நாட்களில் மூடப்படுவது வழக்கம்.

அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் ஆர்பிஐ எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதற்கான விடுமுறை பட்டியலை வெளியிடும்.. வங்கிகளின் விடுமுறை நாட்களை, வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதன் மூலம், அவர்கள் அந்த நாட்களில் வங்கிக்கு சென்று வீணாக அலைச்சல் தவிர்க்கப்படும்.. நேரமும் மிச்சப்படுத்தப்படும்.

புதுவருடம்: இந்த வருடம் புதுவருடம் துவங்கியிருந்த நிலையிலும்கூட, இந்த வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்ற லிஸ்ட் வெளியாகியிருந்தது.. வாடிக்கையாளர்கள் இதற்கேற்ப தங்கள் நிதி நடவடிக்கைகளை திட்டமிடுவதை உறுதி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த பட்டியலை முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.

தேசிய விடுமுறைகள், பண்டிகைகளை தவிர்த்து வார இறுதி நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இதோ இப்போதுகூட, வரப்போகும் மார்ச் மாதத்துக்கான வங்கி விடுமுறைகள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.. அந்தவகையில், வரப்போகும் மார்ச் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்குமாம்.

லீவு லிஸ்ட் இதுதான்:

- 1 மார்ச் 2024 வெள்ளி சாப்ச்சூர் குட் மிசோரம்

- 3 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்

- 6 மார்ச் 2024 புதன் மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி தடைசெய்யப்பட்ட விடுப்பு

- 8 மார்ச் 2024 வெள்ளி மகா சிவராத்திரி/சிவராத்திரி தடைசெய்யப்பட்ட விடுப்பு

- 9 மார்ச் 2024 சனிக்கிழமை இரண்டாவது சனிக்கிழமை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும

- 10 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - வாராந்திர விடுமுறை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும

- 12 மார்ச் 2024 செவ்வாய்க்கிழமை - ரமலான் ஆரம்பம் தடைசெய்யப்பட்ட விடுப்ப

- 17 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - வாரந்தோறும் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை

- 20 மார்ச் 2024 புதன்கிழமை - மார்ச் உத்தராயண அனுசரிப்பு சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்

- 22 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை - பீகார் நாள்

- 23 மார்ச் 2024 சனிக்கிழமை - பகத்சிங் தியாகி தினம் பல மாநிலங்களில் விடுமுறை

- 24 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - ஹோலிகா தஹான் வர்த்தமானி விடுமுற

- 25 மார்ச் 2024 திங்கட்கிழமை - ஹோலி/டோலா யாத்ரா வர்த்தமானி விடுமுறை

- 26 மார்ச் 2024 செவ்வாய்க்கிழமை - யாசங் மணிப்பூர்

- 28 மார்ச் 2024 வியாழக்கிழமை - மாண்டி வியாழன் அனுசரிப்பு தடைசெய்யப்பட்ட விடுப்பு

- 29 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி வர்த்தமானி விடுமுறை

- 30 மார்ச் 2024 சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை நாடு தழுவிய விடுமுறை

- 31 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - ஈஸ்டர் தினம் தடைசெய்யப்பட்ட விடுப்பு

No comments