Breaking News

கேட்டா ஆடிப்போயிருவீங்க..! 1964ல் 10 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

 

1964ஆம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 63.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் 71,320 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

1965ஆம் ஆண்டு - 71.75 ரூபாய்
1975ஆம் ஆண்டு - 540.00 ரூபாய்
1985ஆம் ஆண்டு - 2,130.00 ரூபாய்
1995ஆம் ஆண்டு - 4,680.00 ரூபாய்
2005ஆம் ஆண்டு - 7,000.00 ரூபாய்
2015ஆம் ஆண்டு - 26,343.50 ரூபாய்
2020ஆம் ஆண்டு - 48,651.00 ரூபாய்
2024ஆம் ஆண்டு - 71,320.00 ரூபாய்

1964 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தங்கம் விலை வருடத்திற்குச் சராசரியாக 13.90 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இது கிட்டதட்ட ஒரு ரூபாய் வட்டி வருமானத்திற்கு இணையானது.

இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.2 லட்சம்க்கு கூட விற்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பணவீக்கம், புவிசார் பதட்டங்கள், பெருந்தொற்று ஆகியவற்றை தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே அடுத்த 7 முதல் 12 ஆண்டுகளுக்குள் இந்த விலையை தங்கம் எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

No comments