ஒரு நாளுக்கு 8 மணி நேரம் AC ஓடினால்.. மாதத்திற்கு மின்கட்டணம் எவ்வளவு வரும்?
கோடைகாலத்தில் வெப்பத்தை குறைக்க வீடுகளில் மின்சாதன பொருட்களை பயன்படுத்தும் போது ஏற்படும் மின்கட்டணத்தை பற்றி பலரும் கவலை கொள்வார்கள்.
இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் வெயில் அளவுக்கதிமாக வெளுத்து வாங்குகிறது.
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
ஆனால், நீண்ட நேரம் AC ஓடினால் மின்கட்டணமும் தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும். இதுவே நாம் திட்டமிட்டு AC பயன்படுத்தும் போது மின்கட்டணத்தை குறைக்கலாம்.
ஏசி இயந்திரத்தின் மின்சாரக் கட்டணமானது, ஒரு மாதத்தில் நீங்கள் எத்தனை நாட்களுக்கு ஏசியை பயன்படுத்துகிறீர்கள் மற்றும் ஏசியின் வகை, திறன் மற்றும் வேகம் ஆகியவையை பொறுத்தது.
மின்கட்டணம் எவ்வளவு?
ஏசியானது 24 மணி நேரத்தில் 1000 முதல் 3000 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இதில் 1 டன் ஏசி 1000 வாட்ஸ் மின்சாரத்தையும், 1.5 டன் ஏசி 1500 வாட்ஸ் மின்சாரத்தையும் செலவழிக்கும்.
மேலும், ஒரு டன் திறன் கொண்ட இரண்டு ஏசிகள் வெவ்வேறு சக்தியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதாவது மதிப்பீட்டை பொறுத்து மாறுபடுகிறது.
உதாரணமாக, 5 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்ட 1 டன் ஏசியானது 1 மணி நேரத்தில் 1000 வாட்ஸ் அல்லது 1 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும்.
இதேபோல 5 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்ட 1.5 டன் ஏசியை நாம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால் மாதத்திற்கு சுமார் 360 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படும். இதன்படி, ஒரு யூனிட் விலை ரூ.7 என்றால் 360 யூனிட்களுக்கு மாதம் ரூ.2,500 மின் கட்டணம் வரும்.
குறிப்பாக நீங்கள் ஏசியை பயன்படுத்தும் வெப்பநிலையைப் பொறுத்து மின்கட்டணம் தீர்மானிக்கப்படும். அதாவது குறைவான வெப்பநிலையில் ஏசியை இயக்கினால் மின்கட்டணம் அதிகமாக வரும்.
No comments