AC, ஏர் கூலர்லாம் வேஸ்ட்.. ரூ.1999 விலையில் வீட்டை கொடைக்கானல் போல மாற்றலாம்.. புது மிஸ்டிங் Fan விற்பனை..
ஏசி (AC) வேண்டாம், ஏர் கூலர் (Air Cooler) வேண்டாம், ஆனால் வீட்டில் இருக்கும் வெப்பத்தை மிகவும் குறைந்த விலையில் சமாளிக்க வேண்டும்.
குறிப்பாக, சில்லென்று காற்றும் வேண்டும் என்பவர்களுக்காக இப்போது சந்தையில் மிஸ்ட் ஃபேன்கள் (Mist Fan) விற்பனை செய்யப்படுகின்றன.
சீலிங் ஃபேன் (Ceiling Fan) தெரியும், டேபிள் ஃபேன் (Table Fan) தெரியும், பெடஸ்டல் ஃபேன் (Pedestal Fan) தெரியும், கூலிங் ஃபேன் (Cooling Fan) தெரியும், ஏன் டவர் ஃபேன் (Tower Fan) கூட தெரியும், இது என்னப்பா புதுசா மிஸ்டிங் ஃபேன்னு (Misting Fan) சொல்றீங்க? என்று உங்களில் பலர் சந்தேகத்துடன் கேள்வி கேட்பது எங்களுக்கு தெரியும்.
மிஸ்ட் ஃபேன் அல்லது மிஸ்டிங் ஃபேன் என்றால் என்ன? (What is mean by Mist Fan or Misting Fan):
இதன் பெயர் குறிப்பிடுவது போல, கொடைக்கானல் (kodaikanal) மற்றும் ஊட்டி (Ooty) குளிர்பிரதேசங்களில் காணப்படும் மிஸ்ட் (Mist) போன்று தண்ணீரை தெளிக்கும் ஒரு வகையான பிரத்தியேக ஃபேன் சாதனம் இதுவாகும். இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஃபேன்களின் வரிசையில், உண்மையாகவே சூரியனின் வெப்பத்தையும், வெப்ப காற்றின் சூட்டையும் தணிக்க உதவும் சாதனமாக திகழ்வது தான் இந்த மிஸ்டிங் ஃபேன் (Mist Fan) சாதனம்.
பார்ப்பதற்கு பெடஸ்டல் ஃபேன் போல காட்சியளிக்கும் இந்த மிஸ்ட் ஃபேன் அல்லது மிஸ்டிங் ஃபேன் சாதனத்தை நீங்கள் உற்று கவனித்தால் தான் வித்தியாசம் தெரியும். இதன் முன்பக்கத்தில் சிறிய வாட்டர் டியூப் (water tube) போன்ற அமைப்பு வட்டமாக ஃபேன் கம்பிகள் மீது கிளிப் (clip) செய்யப்பட்டுள்ளது. இந்த டியூப்பின் சில பகுதிகளில் தண்ணீரை மிஸ்ட் போல ஸ்ப்ரே (spray) செய்யும் ஸ்ப்ரேயர் நாசல்கள் (sprayer nozel) பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில உயர் மாடல் மிஸ்ட் ஃபேன்களில் தண்ணீரை சேமித்த வாய்க்கு சிறிய வாட்டர் டேங்க் (water tank) உடன் இந்த மிஸிட்ங் ஃபேன் சாதனங்கள் வருகின்றது. இந்த புதிய வகை மிஸ்ட் ஃபேன் என்று அழைக்கப்படும் மிஸ்டிங் ஃபேனுக்கு இப்போது இந்தியாவில் மவுசு அதிகமாகவுள்ளது. அதிக காசு செலவழித்து ஏசி மற்றும் ஏர் கூலர் வாங்க முடியாத மக்களுக்கு இந்த சாதனம் இப்போது கைகொடுக்கும் தோழனாக மாறியுள்ளது.
ஏன் மிஸ்டிங் ஃபேன், AC மற்றும் ஏர் கூலரை விட சிறந்தது? குறைந்த விலை காரணமா?
உண்மை தான் மக்களே, இன்றைய வெயில் காலத்தில் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க ஏசி (AC) மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், எல்லோராலும் ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை செலவு செய்து புதிய ஏசியை வாங்க முடியாது. அப்படியே ஏசி வாங்கி பயன்படுத்தினாலும், மின்சார கட்டணம் (current bill) நிச்சயமாக 2 மடங்கு அல்லது 3 மடங்கு எகிறிவிடுகிறது. இதுவும் சிக்கலாக அமைகிறது.
இதற்கு அடுத்தபடியாக பட்ஜெட்டில் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க மக்கள் ஏர் கூலர்களை (Air cooler) வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதன் விலை ரூ. 5000 முதல் ரூ. 20,000 வரை செல்கிறது. இதில் ஏசி அளவிற்கு குளுமையான காற்று இல்லை என்றாலும், ஒரு அளவிற்கு அறையின் வெப்பத்தை குறைகிறது. குறிப்பாக ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்து ஏர் கூலரை பயன்படுத்தினால் தான் கூலிங் சூப்பராக இருக்கும்.
இந்த பட்ஜெட் விலையும் எல்லாருக்கும் பொருத்தமானதாக இருக்காது. வெறும் ரூ.1999 முதல் ரூ.5000 விலை மட்டுமே செலவு செய்து, உங்கள் வீட்டின் அறையில் உள்ள வெப்பத்தை நீங்கள் தணிக்க முடிவு செய்தால், கட்டாயம் நீங்கள் மிஸ்டிங் ஃபேன் சாதனத்தை தான் வாங்க வேண்டும். இது குளிர்ச்சியான காற்றை தண்ணீருடன் பீச்சுவதனால், அறையின் வெப்பம் குறைகிறது. பெரிய அறைகளுக்கு இது மிகவும் ஏற்றது.
தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த மிஸ்டிங் ஃபேன் சாதனம் மற்றும் டியூப்கள் வாங்க கிடைக்கிறது. மிஸ்டிங் டியூப் சாதனத்தை நீங்கள் எந்த ஃபேன்னிலும் வேண்டுமானாலும் கிளிப் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்த டியூபை நீங்கள் தண்ணீர் வரும் ஒரு குழாய்யுடன் இணைக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. குறைந்த செலவில், உங்களிடம் இருக்கும் ஃபேனில் இதை இணைத்து பயன்படுத்தி பாருங்கள்.
No comments