Breaking News

ஏழைக்கு ஏற்ற குட்டி AC-யா? சுவரில் மாற்றப்படும் உலகின் முதல் ஏர் கூலர்.. கம்மி விலை.. வீடே சில்லாகும்..

 

ந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு-நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் ஏர் கூலர் (Air cooler), ஏசி (AC), கூலிங் ஃபேன் (Cooling Fan) போன்ற சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

கம்மி விலையில் ஒரு பெஸ்டான சாதனத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அப்படி குறைந்த விலையில் உங்கள் வீட்டை குளுமைப்படுத்த உதவும் ஒரு புதிய குட்டி ஏசி (Mini AC) போன்ற சாதனமாக வெளிவந்துள்ளது தான் இந்த வால் மவுண்ட் ஏர் கூலர் (Wall Mount Air-cooler) சாதனம். இந்த சாதனத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இது பார்ப்பதற்கு ஏசி போல காட்சியளிக்கிறது. ஆனால், இது AC இல்லை.. சுவரில் மாட்டப்படும் ஒரு ஏர் கூலர் சாதனமாகும்.

சிம்பொனி கிளவுட் வால் மவுண்ட் ஏர் கூலர் (Symphony Cloud Wall Mount Air-cooler):

ஆம் மக்களே, இது தற்போது விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஸ்ப்ளிட் ஏசி (Split AC) மாடல் போல காட்சியளிக்கும் ஒரு ஏர் கூலர் சாதனமாகும். குறைந்த விலையில் ஏசி (AC) வாங்க நினைத்து, ஏசி விலை கட்டுப்படியாகாத மக்களுக்கு, சிறந்த பட்ஜெட் தேர்வாக இந்த வால் மவுண்ட் ஏர் கூலர் (Air Cooler) திகழ்கிறது. இந்த ஏர் கூலர் சாதனம், இதுவரை யாரும் பார்த்திடாத புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது.

சுவற்றில் ஏசி போல மாட்ட கிடைக்கும் உலகின் முதல் வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனமே (World's first wall mount air cooler device) இது மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனத்தை, மிகவும் பிரபலமான ஏர் கூலர் பிராண்ட் ஆன சிம்பொனி (Symphony) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதை Symphony நிறுவனம், சிம்பொனி கிளவுட் (Symphony Cloud) என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது. இந்த சிம்பொனி கிளவுட் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட வால் மவுண்ட் ஏர் கூலர் (Symphony Cloud 15L Wall Mounting Air Cooler) சாதனமாகும். இது 57 கியூபிக் மீட்டர் (57cubic meters) அளவு கொண்ட அறையை குளுமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Symphony Cloud விலை என்ன?

சந்தையில் விற்பனை செய்யப்படும் சாதாரண ஏர் கூலர்கள் போல, இதில் வாட்டர் டேங்க் (water tank) இன்பில்ட்டாக வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பொனி கிளவுட் வால் மவுண்ட் ஏர் கூலர் எக்ஸ்டர்னல் வாட்டர் டேங்க் (external water tank) அம்சத்துடன் வருகிறது. அதாவது, உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பக்கெட்டில் (bucket) தண்ணீர் ஊற்றி வைத்து, இந்த சாதனத்துடன் வழங்கப்படும் டியூபை அதனுள் வைத்தால் மட்டும் போதும்.

பக்கெட்டில் இருக்கும் தண்ணீரை இந்த டியூப் (Tube) உறுஞ்சி, ஏர் கூலருக்கு வழங்கி, சில் காற்றை அறைமுழுக்க பரப்புகிறது. இந்த தண்ணீரை சாதனம் மறுசுழற்சி செய்கிறது என்பதனால், தண்ணீரும் அதிகமாக வீணாவதில்லை. உங்கள் அறையின் ஜன்னல் மற்றும் கதுவுகளை திறந்து வைக்கும் பொழுது கூடுதல் சில் காற்றை உணர முடியும் என்கிறது சிம்பொனி நிறுவனம். குறிப்பாக இது ஏசியை விட குறைந்தளவு மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஏசி போன்ற குளிர்ச்சியை வழங்கவில்லை என்றாலும், வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பித்து, உங்கள் வீட்டை குளுமை படுத்த அனுமதிக்கிறது. இதன் விலையும் ஏசி அளவிற்கு அதிகமாக இல்லை என்பதனால், இந்தியாவில் இதன் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த Symphony Cloud சாதனம் இப்போது ரிமோட் கண்ட்ரோலருடன் (remote controller) வெறும் ரூ.12,000 என்ற சலுகை விலையுடன் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.14,000 ஆகும்.

No comments