இன்று முதல் யோகம் தான்... குரு பெயர்ச்சியில் இந்த கோவிலுக்கு மட்டும் போயிட்டு வாங்க... அப்புறம் அதிர்ஷ்டம் அலைமோதும்!
ஜாதகங்கள் நமது மன திருப்திக்காக மட்டுமே. தவிர, அனைத்து யூ-ட்யூப்களிலும் ராசிபலன்களைச் சொல்லி பயமுறுத்துவார்கள்.
இதில், சமைக்கவே தெரியாத நிறைய பேர், ஒவ்வொரு கடையிலும் சாப்பிட்டு, 'சூப்பர்... வேற லெவல்' என்று சொல்கிற வீடியோக்களைப் போலவும் உண்டு. அதனால், குருபெயர்ச்சி பலன்களைப் பார்த்தோ, படித்தோ பயப்படாதீங்க.. உங்கள் கடமையை சரியாக ச்ய்து வந்து, உண்மையுடன் இருந்தாலும், அனைத்து கிரகங்களும் நமக்கு துணை நிற்கும்.
குருபெயர்ச்சி காலங்களில், யோகம் பெற்ற ராசிகளோ.. பரிகாரம் தேவைப்படுகின்ற ராசிகாரர்களோ... இந்த கோயில்களில், உங்களுக்கு எது அருகாமையில் இருக்கிறதோ அந்த கோவிலுக்கு சென்று குருபகவானை தரிசித்து, குரு அருள் பெற்று சந்தோஷமாக வாழ்க்கையை முன்னெடுங்க. இன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடம் பெயர்கிறார். இந்நிலையில், இந்த குரு பெயர்ச்சியினால் ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
குருபகவன் கோயில் என்று சொன்னாலே எல்லோரும் ஆலங்குடியைச் சொல்வார்கள். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே இருக்கிறது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு தனி சன்னதி இருப்பது சிறப்பு. இங்கு உங்கள் பிரார்த்தனைகளை குரு பகவானை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டு சொல்லி வந்தால், நினைத்தது நடைபெறும்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் கோயில் காசிக்கு நிகரானதாக கருதப்படுகிறது. இங்கு குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார்.
சென்னையில் இருப்பவர்களுக்கு பாடி சரவணா ஸ்டோர்ஸ் அருகே உள்ள திருவலிதாய நாதர் கோயில் உகந்தது. குருபகவானுக்கு பரிகாரம் செய்வதற்கு இந்த கோயில் புனிதமாகக் கருதப்படுகிறது.
தஞ்சாவூரில்அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தரும் நிலையில், அவர்களுக்கு நடுவில் குருபகவான் ராஜகுருவாக காட்சி தருகிறார். இப்படி வேறு எந்த ஆலயத்திலும் குருபகவான் ராஜ குருவாக காட்சியளிப்பதில்லை.
இந்த கோடை விடுமுறை தினங்களில் திருச்செந்தூர் சரியான தேர்வாக இருக்கும். குடும்பத்தினருன் திருச்செந்தூர் சென்று, செந்தூர் முருகனை தரிசித்து, பின்னர், இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தரும் குரு பகவானை வணங்கினால் தோஷங்கள் நீங்கி, நன்மைகள் நடைபெறும்.
திருச்செந்தூர் செல்பவர்கள், அருகிலேயே தூத்துக்குடியில் கைலாச நாதர் கோயில் சென்று வழிபடலாம். நவ கைலாயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயிலில், குரு பகவான் கைலாச நாதரின் அம்சமாக இருக்கிறார்.
சிவகங்கையில் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். இந்த கோயிலுக்கு செல்லும் போது, ஆலயத்தின் பின்புறம் இருக்கும் ஆலமரத்தையும் வழிபட மறக்காதீங்க.
No comments