இன்ப செய்தி! தங்கம் விலை குறையுதே.. எத்தனை காலம் குறையும்.. எந்தளவு குறையும்! ஆனந்த் சீனிவாசன் நறுக்:
இந்தியாவில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், எவ்வளவு காலம் குறையும்..
எந்தளவுக்குக் குறையும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் ஆபத்தான காலத்தில் தங்கத்தைப் போல வேறு எதுவும் நமக்கு உதவாது. எதாவது அவசர பணத் தேவை என்றால் தங்கத்தை விற்றோ அல்லது வங்கியில் வைத்தோ மிக எளிதாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் காரணமாகவே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை முதலில் சேமிக்கிறார்கள். நிலம், பங்குகள் என எது இருந்தாலும் தங்கத்தைப் போல அவற்றை ஈஸியாக ரொக்கமாக மாற்ற முடியாது என்பதால் தங்கச் சேமிப்பு அனைவருக்கும் முக்கியமானது.
ஆனந்த் சீனிவாசன்: இதன் காரணமாகவே அனைத்து குடும்பங்களும் குறைந்தது 200 கிராம் தங்கத்தைச் சேமிக்க வேண்டும் என்கிறார் ஆனந்த் சீனிவாசன். இதற்கிடையே வரும் காலத்திலும் தங்கம் விலை கொஞ்சம் குறையலாம் என்று தெரிவித்துள்ள ஆனந்த் சீனிவாசன், எவ்வளவு காலம் அது அப்படி இருக்கும்... ஏன் திடீரென தங்கம் விலை குறைகிறது என்பதை விளக்கியுள்ளார்.
தங்கம் விலை: இது தொடர்பாக அவர் தனது வீடியோவில், "தங்கம் விலை நேற்று மீண்டும் குறைந்துள்ளது. ரூ.6500 வரை தங்கம் செல்ல வாய்ப்பு இருக்கு. எனவே, அதை வாங்கலாம். அதிலும் தங்கம் ஒரு கிராம் ரூ.6500க்கு செல்லும் போது தினசரி ஒரு மில்லி கிராம் தங்கத்தையாவது வாங்கலாம். அதுவே சரியானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
அதேபோல அவர் தனது மற்றொரு வீடியோவில், "தங்கம் கடந்த சில நாட்களில் மட்டும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. அமெரிக்காவிலும் தங்கம் விலை குறைந்ததே இதற்குக் காரணமாகும். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். தங்கம் விலை இறங்குமா எனக் கேட்டால்.. ஆம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தங்கம் விலை இறங்கவே செய்யும்.
கொஞ்சம் கொஞ்சமாக வாங்க வேண்டும்: தங்கம் ஒரு கிராம் ரூ.6500 வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்காக இப்போது வாங்க மாட்டேன் ரூ.6500க்கு செல்லும் போது தான் வாங்குவேன் எனச் சொல்லக்கூடாது. இப்போது முதலே தங்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க வேண்டும். அமெரிக்கப் பங்குச்சந்தை குறைய ஆரம்பித்துள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தைக்கு இப்போது தான் உண்மை புரிய ஆரம்பித்துள்ளது. அங்கு விலைவாசி அதிகரிப்பதால் இப்போதைக்கு அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்படாது.
வட்டி விகிதம்:
இந்த முறை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு
இல்லை. அடுத்த ஜூலை மாதம் வரை வட்டி விகிதம் குறைக்கப்படாது. எனவே அடுத்து
வட்டி விகிதம் குறைப்பு என்றால் செப். மாதம் தான். அதுவும் பொருளாதாரம்
எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான். யாரெல்லாம் 6, 7 முறை வட்டி
விகிதம் குறையும் என்றார்களோ அவர்களே டிசம்பர் வரை வட்டி விகிதம் குறையாது
எனச் சொல்லிவிட்டார்கள். இதுவும் ஒரு காரணம்" என்றார்.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்து தங்கம் விலைக்கும் பெரியளவில் மாறும். அதாவது அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்தால் தங்கம் விலை குறையும்.. வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்கும்.. விரைவில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்பதாலேயே தங்கம் விலை அதிகரித்தது. அதேநேரம் இப்போது வட்டி விகிதம் செப். வரை குறைக்க வாய்ப்பு இல்லை என்பதாலேயே தங்கம் விலை சற்று குறையும் என்கிறார் ஆனந்த் சீனிவாசன்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
No comments