பிஎப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா.. இப்படி எல்லாம் சிக்கல் வரலாம்.. நோட் பண்ணிக்கோங்க
பிஎப் கணக்கில் பணம் எடுத்து தான் சில மிக அவசர தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் EPFO இல் பணம் எடுக்க போகும் போது இப்படி எல்லாம் சிக்கல் வருமா என்பது போல் சிக்கல்கள் உள்ளன. அறியாமை காரணமாக சில சிக்கல்களை பலர் எதிர்கொள்கிறார்கள்.. அவற்றை பற்றி பார்ப்போம்.
ஒருவர் பிஎப் கணக்கில் பணம் எடுப்பது என்பது வேறுவழியே இல்லை என்கிற நிலையில் தான் எடுக்க வேண்டும்.. வேலையில்லை.. மருத்துவ அவசரம், வீடு கட்ட, கல்வி கட்டணம் செலுத்த போன்ற மிகஅவசர காரணத்திற்கு பிஎப் அட்வானஸ் மூலம் பணம் எடுக்கலாம். . ஆனால் பிஎப் பணத்தை எடுக்காமல் 58 வயது வரை இருந்தால், உங்கள் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பணம் அதில் சேமிப்பாக இருக்கும். ஒய்வூதியமும் கிடைக்கும்.
நடைமுறை சிக்கல்கள் காரணமாக அல்லது சரியான வேலையில்லாத சூழல் காரணமாக பிஎப் அட்வான்ஸ் முறையில் பணம் எடுக்கிறார்கள். பிஎப்பில் பணம் எடுக்க உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் செல்போன் நம்பர் கண்டிப்பாக வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பணம் எடுக்க முடியாது. அதேபோல் பான் கார்டு ஆதார் கார்டு இணைக்காமல் இருந்தாலும் பணம் எடுக்க முடியாது. பான் கார்டு, ஆதார் கார்டில் ஒரே பெயர் இருந்தால் மட்டுமே பான் ஆதாரை இணையும் என்பது முக்கியமான விஷயம்,
பிஎப் அட்வான்ஸ் எப்படி: epfo இணையதளமான https://www.epfindia.gov.in/ இணையதளத்திற்குள் செல்லுங்கள். அதில் சர்வீஸ் என்று இருக்கும் முதல் ஆப்சனில் எம்ப்ளாயி என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் Member UAN/Online Service (OCS/OTCP) என்று ஆப்சன் கீழே காட்டும். அதனை கிளிக் செய்தால் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்று ஓபன் ஆகும்.
அதில் உங்கள் யுஏஎன் நம்பர், அதற்கு கீழ் உங்கள் பாஸ்வேர்டு மற்றும் அதில் உள்ள கேப்சாவை நிரப்ப வேண்டும். பாஸ்வேர்டு மறந்துவிட்டால், பாஸ்வேர்டு மறந்துவிட்டதற்கான ஆப்சனை கிளிக் செய்து ரீசெட் செய்து ஓபன் செய்யலாம். உள்ளே செல்ல ஓடிபி கேட்கும். உங்கள் மொபைலுக்கு வந்த ஓடிபியை போட்ட பின்னர் லாகின் ஆகிவிடும். லாகின் செய்து உள்ளே சென்றால் அதில் கடைசி ஆப்சனாக இருக்கும். அதில் ஆன்லைன் சர்வீஸ் என்ற ஆப்சனில் ONLINE CLAIM (FORM 31,19,10C & 10D) என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் வங்கி கணக்கு எண்ணை கேட்கும். அதனை செய்த பின்னர் என்ன காரணத்திற்காக பணம் எடுக்கிறீர்கள் என்பதை குறிப்பிடுங்கள். அதற்கும் ஆப்சன் காட்டும் . அதை முடித்துவிட்டு எவ்வளவு பணம் என்பதை குறிப்பிடுங்கள்.
உங்கள் கணக்கில் உள்ள பணத்தில் பாதியை பெற முடியும். அதற்கு மேல் போட வேண்டாம். அதன்பிறகு நீங்கள் பிஎப் தளத்தில் கொடுத்த வங்கி கணக்கு எண்ணின் செக் லீப் ஒன்றினை பென்சிலால் ஒரு முறை அடித்து வைத்துள்ள புகைப்படம் எடுத்து அதனை அப்லோடு செய்யுங்கள். (குறிப்பு உங்கள் பெயர் அந்த செக் லீப்பில் இருக்க வேண்டும்). இறுதியாக உங்கள் ஆதாரில் உள்ள முகவரியை சரியாக டைப் செய்யுங்கள். அதன்பிறகு உங்கள் ஆதாரை ரிஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணிற்கு ஒடிபி வந்துவிடும். அந்த ஒடிபியை டைப் செய்து சப்மிட் கொடுங்கள். இப்போது உங்கள் கோரிக்கை பிராசஸில் உள்ளதாக குறிப்பிடுவார்கள். உங்கள் கோரிக்கை 20 நாட்களில் நிறைவேறி பணம் உங்கள் வங்கி கணக்கிற்கே வந்துவிடும்.
அதேநேரம் பிஎப் அட்வான்ஸ அல்லது பிஎப் கணக்கு முடிக்க பணம் எடுப்போர், செக் லீப்பை அடித்து இன்செர்ட் செய்யாவிட்டால் பணம் கிடைக்காது. செக் லீப்பில் உங்கள் பெயர் இல்லாவிட்டாலும் பணம் வராது. அதேபோல் நீங்கள் வேறு வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளீர்கள் என்றால், அந்த கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் தற்போது வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ள உங்கள் பிஎப் கணக்கிற்கு மாற்ற வேண்டும் . அப்படி செய்யாவிட்டால் பணம் வராது. உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக காட்டும்.
இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே நீங்கள் பணியாற்றிய நிறுவனம், நீங்கள் வேலையை விட்டு அந்த நிறுவனத்தில் நின்ற தேதியை பிஎப் தளத்தில் உடனே குறிப்பிட வேண்டும். அப்படி தேதியை குறிப்பிடாமல் விட்டால், உங்களால் பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியாது. அத்துடன் பிஎப்பில் பணமும் எடுக்க முடியாது. உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக 15 நாட்கள் கழித்தே உங்களுக்கு தெரிவிக்கும்.
அதபோல் வேலையைவிட்டு நின்ற தேதியில் இருந்து இரண்டு மாதம் கழித்த பின்னரே உங்களால் பிஎப் கணக்கினை மொத்தமாக முடித்து பணம் எடுக்க முடியும். அட்வான்ஸ் எடுக்க போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக எல்லா பிஎப் கணக்கின் பணத்தையும் ஒற்றை கணக்கிற்கு மாற்றினால் மட்டுமே பணம் எடுக்க முடியும். பிஎப் கணக்கை ஒரே கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்து உடனே மாற்றலாம்.
No comments