ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள் ? இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்..!
ஐசிஐசிஐ புதிய கட்டணங்கள்:-
- கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ கார்டை மாற்ற வாடிக்கையாளர் 200 ரூபாய் செலுத்த வேண்டும்.
- வங்கி விடுமுறை நாட்களில் பண டெபாசிட் இயந்திரங்களில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
- சேமிப்புக் கணக்கிற்கான புகைப்படம் மற்றும் கையொப்பச் சரிபார்ப்பிற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து விண்ணப்பத்திற்கு 100 ரூபாய் வசூலிக்கப்படும்.
- வாடிக்கையாளர்கள்
தங்கள் சொந்த கிளையில் மாதத்திற்கு 3 முறை இலவச பணப் பரிவர்த்தனைகள்
செய்து கொள்ளலாம். அதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. அதாவது
முதல் மூன்று பரிவர்த்தனைகள் இலவசம். இந்த வரம்பை மீறினால் ஒரு
பரிவர்த்தனைக்கு ரூ.150 வசூலிக்கப்படும்.
- காசோலை புத்தகத்தில் ஒரு வருடத்தில் முதல் 25 காசோலை பக்கங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி எந்த கட்டணத்தையும் வசூலிக்காது. ஆனால் அதன் பிறகு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பக்கத்திற்கும் 4 ரூபாய் செலுத்த வேண்டும்.
- டூப்ளிகேட் பாஸ்புக்குகளை வழங்குவதற்கு 100 ரூபாயும், ஒரு பக்கத்தைப் புதுப்பிக்க 25 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.1,000 வரையிலான ஒவ்வொரு பரிவர்த்தனை தொகைக்கும் ரூ.2.50, அதற்கு மேல் மற்றும் ரூ.25,000 வரையிலான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.5 வசூலிக்கப்படும். அதேபோல, ரூ.25,000க்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 வசூலிக்கப்படும்.
- வங்கி விடுமுறை நாட்களில் பணம் டெபாசிட் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்யப்பட்டால் கட்டணம் விதிக்கப்படும். மூத்த குடிமக்கள், அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகள், ஜன்தன் கணக்குகள் மற்றும் பார்வையற்றோரின் கணக்குகள், மாணவர் கணக்குகள் அல்லது ஐசிஐசிஐ வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்தக் கணக்குக்கும் இந்த கட்டணங்கள் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
No comments