ரூ.45 ஆயிரத்துக்கு 10 கிராம் தங்கம் வாங்கலாம் - எப்படி தெரியுமா?
10 கிராம்
22 காரட் தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. சுத்த
தங்கத்தின் விலை (தங்க விலை) ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது.
தங்கம் விலை இவ்வளவு அதிகமாக இருக்கும் நிலையில் 10 கிராம் தங்கம் ரூ.45
ஆயிரத்திற்கு கிடைக்குமென்றால் நம்புவீர்களா? ஆம் குறைந்த விலைக்கு தங்கம்
வாங்கலாம். ஆனால் இதற்கு நீங்கள் பூடான் செல்ல வேண்டும்.
பூடானில் குறைந்த விலையில் தங்கம் வாங்கி அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரலாம். வரி செலுத்த தேவையில்லை. ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் பொருந்தும். அந்த நிபந்தனைகளை பின்பற்றுபவர்களுக்கு குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும்.
பூடானின் ஃபுயென்ஷோலிங் மற்றும் திம்பு பகுதிகளுக்குச் செல்லும் இந்தியர்கள் குறைந்த விலையில் தங்கம் வாங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதாவது இந்தியர்கள் அங்கு வரியில்லா தங்கத்தை வாங்கலாம். எந்த வரியும் செலுத்தாமல் தங்கத்தை வாங்கலாம். பிப்ரவரி 21 அன்று, பூடான் அரசாங்கம் இந்தியர்களுக்கு வரியில்லா தங்கத்தை விற்க முடிவு செய்தது. அன்று, மாண்புமிகு மன்னர் லோசரின் பிறந்தநாள், இதையடுத்து இந்த முக்கியமான முடிவை எடுத்தது பூடான் அரசு. இந்த பின்னணியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதே நோக்கமாகும்.
சமீபத்திய விலைகளின்படி, இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60,490 ஆக உள்ளது. பூட்டானில் இதே தங்கத்தின் விலை BTN 43,741.90 அதாவது 43,741.90 பூட்டான் பணம். இந்திய மதிப்பில் ஒரு BTN தோராயமாக ஒரு ரூபாய்க்கு சமம். அதாவது இந்தியர்கள் ரூ.43,741.90 என்ற அதே விலையில் 10 கிராம் தங்கம் வாங்கலாம். ரூ.16 ஆயிரத்துக்கு மேல் தள்ளுபடியுடன் 10 கிராம் தங்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
ஆனால் இவ்வளவு குறைந்த விலையில் தங்கம் வாங்க சில நிபந்தனைகள் உள்ளன. வரியில்லா தங்கத்தை வாங்க இந்தியர்கள் நிலையான வளர்ச்சிக் கட்டணமாக ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தையும் சேர்த்தால் 10 கிராம் தங்கம் ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கலாம். இது தவிர, பூட்டான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா விடுதியில் குறைந்தது ஒரு இரவு தங்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் தங்கம் வாங்க அமெரிக்க டாலர்களையும் கொண்டு வர வேண்டும்.
ஆடம்பரப் பொருட்களை விற்கும் நிதி அமைச்சகத்திற்குச் சொந்தமான வரியில்லா விற்பனை நிலையங்கள் மூலம் வரியில்லா தங்கத்தை வாங்கலாம். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய விதிகளின்படி, இந்திய ஆண் ஒருவர் ரூ. 50,000 மதிப்புள்ள தங்கம் கொண்டு வரலாம். இந்திய பெண் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து வரியின்றி இந்தியாவிற்கு கொண்டு வரலாம்.

No comments