5 ஆண்டு முதலீடு, ரூ.6.71 லட்சம் வட்டி வருமானம்: அசத்தல் ஸ்கீம்!
Post-office-savings-scheme | என்எஸ்சி (NSC) அல்லது தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் நிலையான வருமான முதலீட்டுத் திட்டமாகும்.
சிறு மற்றும் நடுத்தர வருமான முதலீட்டாளர்கள் வருமானம் ஈட்டும்போது வரியைச் சேமிக்க இந்தச் சேமிப்புப் பத்திரம் ஏற்றது ஆகும்.
இந்தத்
திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 1,000 ஆகும்.
அதிகப்பட்ச தொகைக்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த
திட்டத்தில் ஒன்றாக முதலீடு செய்ய இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக்
கணக்கையும் தொடங்கலாம். சிறார்கள் சார்பாக அவர்களின் பெற்றோர், தாய்மாமன்,
பாதுகாவலர் முதலீடு செய்யலாம்.
மேலும், இந்தத் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம், 7.7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.6,73,551-ஐ வட்டியாகப் பெறலாம். அதாவது, முதிர்ச்சியின் போது மொத்தமாக ரூ.21,73,551 வட்டி கிடைக்கும்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்
- தகுதி : இந்திய குடிமக்கள் மட்டும்
- வரி பலன்கள் : வருமான வரிச் சட்டம் 80சி பலன்கள்
- திட்டத்தின் காலம் : 5 ஆண்டுகள்
- குறைந்தப்பட் முதலீடு : ரூ.1000
- அதிகப்பட்ச முதலீடு : வரம்புகள் இல்லை
- வட்டி விகிதம் : 7.7 சதவீதம்
முன்கூட்டியே திரும்ப பெற முடியுமா?
ஐந்தாண்டு முதிர்வு காலத்திற்கு முன் NSC முதலீடுகளை திரும்பப் பெற முடியாது. இருப்பினும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில், முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.
No comments