Breaking News

ரயில்வேயில் 5,696 உதவி லோகோ பைலட் காலிப்பணியிடங்கள்

ந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 உதவி லோகோ பைலட் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் பிப்ரவரி 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள் :

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்வயது வரம்புசம்பளம்
உதவி லோகோ பைலட்5,69618-30ஆரம்பகட்ட சம்பளம் ரூ.19,900

கல்வித்தகுதி :

10 வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஏதேனும் பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பிற்கு பிறகு தொழிற்கல்வி பிரிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இன்ஜினியரிங் படித்தவர்கள் கூட இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் CBT-1, CBT-2, CBT-3 ஆகிய மூன்று நிலை கணினி வழி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அதனைத்தொடர்ந்து, சான்றுதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை பின்னர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். இப்பணியிடங்களுக்கு வயது சலுகை உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையத்தளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

No comments