காலை உணவில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
பொதுவாக உணவு என்பது நமது உடலை இயங்க வைக்கும் முக்கிய மூலப் பொருளாகும். ஆனால் பலரும் உணவை அலட்சியப்படுத்தி சாப்பிடாமல் தங்களது உடலுக்கு அவர்களே பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தி விடுகின்றனர்.
அதிலும் குறிப்பாக காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் பலரும் காலை உணவை தான் தவிர்த்து வருகின்றனர். காலை உணவை தவிர்ப்பதால் உடலுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கோளாறு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இன்னும் சிலர் காலை உணவில் புரோட்டா, பன் போன்ற மைதா உணவுகளை சாப்பிடுகின்றனர். இதுபோன்ற உணவுகளை உடலுக்கு பல்வேறு வகையான தீங்குகளை ஏற்படுத்தும். எனவே காலை உணவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
காலையில் எழுந்ததிலிருந்து 3 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட்டு விட வேண்டும். அதேபோல் காலை 9 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதேபோல் காலையில் மைதாவால் செய்யப்பட்ட பிரட் மற்றும் ஜாம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கடைகளில் விற்கப்படும் பாட்டில் ஜூசை குடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம்.
மேலும் காலை உணவில் பரோட்டா சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் காலையில் தயிர் சாப்பிடக்கூடாது. காலையில் தயிர் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து விடுகிறது.
No comments