ஊறவச்ச பயறு.. முளைகட்டின பயறுகளில் கொட்டி கிடக்கும் அற்புதம்.. ஊறவைத்து அப்படியே சாப்பிட கூடாதாமே
முளை கட்டிய பயறுகளை சாப்பிடுவதுதான் சிறந்ததா? முளை கட்டிய பயறுகளை சாப்பிடுவதால் தீமைகள் என்ன?
சாதாரணப் பயறுகளைவிட, ஊற வைத்த அதாவது முளைகட்டிய பயறுகளில் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளன.. வைட்டமின் A, C, B, K , புரதம், நியாசின், தயாமின், இரும்புச்சத்து, ஜிங்க், இவைகளுடன் அபதிமிதமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மனிதனுக்கு தேவையான அத்தனை வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால்தான், முளைகட்டி பயறுகளை சாப்பிட சொல்கிறார்கள்,
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் இருப்பதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதாம். இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சர்க்கரை நோய்: முளை கட்டிய பயிர்களை சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.. குறைவான கலோரியில் நிறைய நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.. இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது..
தினமும் ஒரு கப் சாப்பிட்டு வந்தாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இதனால், இதய ஆரோக்கியம் காக்கப்படும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை இந்த பயறுகளுக்கு உண்டு. இப்படி இதயத்தை காக்கும்படி செய்வதால், பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயத்தை நீக்குகின்றன.
தோல் சுருக்கம்: இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன.. அத்துடன், DNA மாற்றத்தை கட்டுப்படுத்தி, பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலை தடுத்து நிறுத்துகிறது. பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
முளைகட்டிய பயறுகள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன.. காலை உணவாக இந்த பயறுகளை சாப்பிடும்போது, நாளெல்லாம் உடலுக்கு எனர்ஜியும் சுறுசுறுப்பும் கிடைக்கின்றன.. அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உள்ளதால், உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் நீங்குகின்றன. இதனால், குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், உடல் எடையை குறைக்கவும் வெகுவாக உதவுகிறது.
கண்கள் : முளை கட்டிய பயறுகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதில்லை.. கண்பார்வையும் கூர்மை பெறும்.. இதற்கு காரணம், வைட்டமின் A இதில் அதிகமாக உள்ளதுதான்..
மேலும், ஒமேகா கொழுப்பு அமிலம் இருப்பதால், தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன. முளைகட்டிய பயறுகளிலுள்ள வைட்டமின் B, சருமத்தை கவசம் போல காக்கிறது.. இன்னும் சொல்லப்போனால் தோல் புற்றுநோயைத் தடுக்கும் அளவுக்கு, சக்தி கொண்டது இந்த பயறுகள்.. ரத்த சோகை உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த முளைகட்டிய பயறுகள்.
பயிறுகள்: முளைகட்டிய பயறுகளை எண்ணெயில் பொரித்து சாப்பிடக் கூடாது.. அதேபோல, முளைகட்டிய பிறகு அப்படியே சாப்பிடாமல், நன்றாக வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. இல்லாவிட்டால், காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.. வயது முதிர்ந்தவர்கள் முளைகட்டிய பயறுகளை அதிகமாக சாப்பிட தேவையில்லை.
No comments