வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. உயர்நீதிமன்றத்தில்
சென்னை
உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள தட்டச்சர் (Typist), தொலைபேசி ஆப்ரேட்டர்
(Telephone Operator), காசாளர் (cashier), ஜெராக்ஸ் ஆபரேட்டர் (Xeorx
operator) ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் 33 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 13/02/2024 ஆகும்.
தட்டச்சர் பதவியின் கீழ் 22 பணியிடங்களை நிர்ப்பப்பட உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்/ ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் தட்டச்சு தேர்வில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (CERTIFICATE COURSE IN COMPUTER ON OFFICE AUTOMATION)
1 தொலைபேசி ஆப்ரேட்டர் (Telephone Operator) பணியிடமும், 2 காசாளர் (cashier) பணியிடமும், 8 ஜெராக்ஸ் ஆபரேட்டர் (Xeorx operator) பணியிடங்களும் நிர்ப்பப்பட உள்ளன. இந்த, காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு (Common Written Examination), செய்முறைத் தேர்வு (Skill Test) மற்றும் வாய்மொழி தேர்வின் (Viva - Voce) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பதாரர், பதிவு செய்வதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தின் (https://www.mhc.tn.gov.in) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்வரும் விவரங்களைப் பதிவுசெய்தல் வேண்டும்.
(i) மின்னஞ்சல் முகவரி (Email-ID)
(ii) கைப்பேசி எண்
(iii) பெயர் (பெயர் பள்ளிச் சான்றிதழில் உள்ளவாறு அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் அரசிதழில் உள்ளவாறு)
(iv) புதிய கடவுச்சொல்லை (Password) உருவாக்குதல்
(v) கடவுச்சொல்லை உறுதி செய்தல்
(vi) கேப்சா குறியீடு (captcha code)
Notification: Madras High Court Recruitment for the posts of Typist Telephone Operator Cashier and Xerox Operator
விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் வெற்றிகரமாக பதிவுசெய்தபின், விண்ணப்பதாரர்களால் அளிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் இணைப்பு (link) அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரர், அந்த இணைப்பை சொடுக்கி (click), அதனை செயற்பாட்டுக்கு கொண்டுவருதல் வேண்டும். செயற்பாட்டுக்கு கொண்டு வந்தபின், விண்ணப்பதாரர்கள், தங்களது மின்னஞ்சல் முகவரியை பயனாளர் குறியீடாகவும் (user ID) பதிவின்போது அவரால் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லையும் பயன்படுத்தி இணையதளத்திற்குள் login செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் (https://www.mhc.tn.gov.in) தேர்வு சம்மந்தமான அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

No comments