Breaking News

செம ஷாக்.! 200/212 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவி.. வைரலாகும் மார்க் சீட்.!!!

 


குஜராத் மாநிலத்தில் உள்ள கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மனிஷாபாய் வம்சபில் என்ற மாணவியின் மார்க் சீட் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த மாணவி குஜராத்தி மற்றும் கணித பாடத்தில் முறையே 200-க்கு 211 மற்றும் 212 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை அந்த மாணவி தன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் காட்டவே அவர்கள் அதை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பிறகு கூட்டலில் சிறு தவறு நடந்து விட்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து அந்த மாணவி குஜராத்தி பாடத்தில் 200-க்கு 191 மதிப்பெண்கள் எடுத்ததாகவும், கணிதத்தில் 200-க்கு 190 மதிப்பெண்கள் எடுத்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

No comments