Breaking News

Akshaya Tritiya 2024: தங்கம் தான் வாங்கணும்னு அவசியம் இல்லை..! செல்வம் பெருக இதை செய்தால் போதும்..!

 

Akshaya Tritiya 2024: அட்ச திருதியை வந்துவிட்டால் போதும் முதலில் நம் நினைவுக்கு வருவது தங்கம் தான்.

அதிலும் பெண்கள் அன்றைய தினம் எப்படியாவது 1 கிராம் தங்கத்தையாவது வாங்கி வைத்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும் என்று ஒரு நம்பிக்கை. அன்றைய தினம் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா? வேறு எந்த பொருளை வாங்கினால் நம் வீட்டில் செல்வம் பெருகும் என்பதை (Akshaya TritiyaEndral Enna) பார்க்கலாம்.

அட்சயம் (Akshaya Tritiya Meaning in Tamil) என்பது தேயாது, குறையாது என்பது பொருள். இந்த நாளில் நாம் என்ன செய்தாலும் அது பல மடங்கு பெரும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மக்கள் சேர்ப்பார்கள். ஒரு சிலர் மற்றவர்களுக்கு தானம் வழங்குவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை அன்று அதிகாலை எழுந்து நீராடி விட்டு, பூஜை அறையை முதல் நாள் அன்றே சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அட்ச திருதியை நாளில் விளக்கேற்றி வைத்து, ஒரு வாழை இலையை வைத்து பச்சரியை நிரப்பி அதன் மேல் ஒரு செம்பு வைத்து கலசம் போன்ற தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது மஞ்சள் தடவிய தேங்காயை செம்பின் மேல் வைத்து அதனை சுற்றிலும் மாவிலையை வைத்து, அதன் பக்கத்தில் ஒரு குத்துவிளக்கேற்றி வைத்து கொள்ள வேண்டும்.

இந்நாள் முக்கியமாக லெட்சுமி தேவிக்கு உகந்த நாளாக பார்க்கப்படுவதால் அன்று லெட்சுமி தேவியின் படத்திற்கு மற்றும் மற்ற சுவாமி படங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட வேண்டும். அன்றைய தினம் நீங்கள் வாங்கி வந்த பொருளை வைத்து வழிபட வேண்டும்.

வாங்க வேண்டிய பொருட்கள் - Akshaya Tritiya 2024

அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது (Akshaya Tritiya Andru Vanga Vendiyavai) என்பது அனைவராலும் இயலாத ஒன்று. அட்சய திருதியை அன்று உப்பு, அரிசி, மஞ்சள், தானியங்கள் போன்றவைகளை வாங்கலாம். இதனை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால், வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.

அட்சய திருதியை அன்று புதிய ஆடைகளை வாங்கலாம். புதிய ஆடைகள் வாங்குவதால் வஸ்திரம் பெருகும் என்பது ஐதீகம். புதிய வாகனங்கள் வாங்கலாம். இந்நாளில் புதிய வாகனங்கள் வாங்குவதால் வாகன பயணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் கல்யாணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்களுக்கு பேச்சுவார்த்தையை தொடங்கலாம்.

இந்நாளில் நம் வீட்டிற்கு மட்டும் பொருட்களை வாங்கி சேமிப்பதற்கு பதிலாக இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை, தானம் வழங்கி வந்தால் புண்ணியம் சேரும். இதனால் பலரும் அட்சய திருதியை அன்று தானம் வழங்குவார்கள்.

இந்த வருடம் 2024 மே மாதம் 10 தேதி வெள்ளிக்கிழமை (Akshaya Tritiya 2024 Date and Time in Tamil) மே அட்சய திருதியை அன்று உங்கள் வீட்டில் செல்வம் பெருக உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி வணங்கி வாருங்கள். உங்கள் வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும். இந்த வருடம் அட்சய திருதியைக்கு உகந்த நேரமாக மே 10 தேதி காலை 6.33 மணி அளவில் தொடங்கி மறுநாள் மே மாதம் 11 தேதி காலை 4.56 மணி அளவில் முடிவடைகிறது.

No comments