Breaking News

நல்ல தர்பூசணி வாங்குவது எப்படி..?சுவையான தர்பூசணி கண்டறிய டிப்ஸ் இதோ..!

 


ர்பூசணியை முழுமையான பழமாக வாங்கும்போது சில நேரங்களில் வாங்கும் பழங்கள் காயாக இருக்க வாய்ப்பு உண்டு.

காயை அறுத்த பின்னர் அது வீணாகிவிடும். அதனால் வாங்கும்போதே பழமாக வாங்குவதற்கு எளிய வழிகள் இருக்கின்றன. பொதுவாக மண்ணில் கொடியாகப் படரும் காய்கள் (சுரைக்காய், பூசணிக்காய்) தரைப் பகுதியில் இருக்கும். அந்தக் காய்களில் தரையில் உள்ள பாகம் மஞ்சள் வண்ணத்திற்கு மாறும். அதைப்போன்று தர்பூசணி பழமானது, நல்ல மஞ்சள் நிறத்தில் அல்லது ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் சற்றே பிசுபிசுப்புடன் இருக்கும். மாறாகத் தரையில் இருக்கும் பகுதி வெண்மை நிறத்தில் இருந்தால் அது முழுமையாகப் பழுக்காத பழம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

தர்பூசணி பழத்தின்மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால், அந்தப் பழம் அடிபட்டதாக நினைத்து பெரும்பாலானோர் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும். அதற்கு ஒரு காரணமும் உண்டு. தர்பூசணி பூவாக இருக்கும்போது அதிக தேன் எடுக்கும்பொருட்டு பல பூச்சிகளும், தேனீகளும் பலமுறை அணுகுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கும். அதனால், பூவின் இதழ்களில் தழும்புகள் ஏற்பட்டுவிடும். பூ, காயாகி கனியானாலும் கூட அந்தத் தழும்புகள் வலைப்பின்னலாக மாறி பழத்தில் இருக்கும். இதைக் கொண்ட தர்பூசணி பழங்கள் அதிகமான சுவையுடன் இருக்கும்.எப்படி அதிகமான தேனீக்கள் முகர்ந்த மலர்கள் சுவையானது என அறிய முடியுமோ, அப்படி தான் தர்பூசணியில் பிரவுன் நிறத்தில் இருக்கும் பகுதி கண்டு அறியலாம். தேனீக்கள் அதிகமாக தீண்டி இருந்தால் இந்த பிரவுன் நிறம் அதிகமாக இருக்கும். இதை வைத்து நீங்கள் சுவையான தர்பூசணியை தேர்வு செய்யலாம்.

ஆண் தர்பூசணிப் பழங்கள் பெரியதாகவும், நீள் வடிவத்துடனும் இருக்கும். இத்தகைய பழங்கள் சுமாரான சுவையுடனும் இருக்கும். அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும். பெண் தர்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிக இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும். இது தெரியாத பலரும் பழங்கள் உருவத்தில் பெரியதாகவும், அதிக இனிப்பில்லாத ஆண் பழங்களை வாங்குகிறார்கள். நாம் வாங்கும் தர்பூசணிப் பழம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இல்லாமல் சராசரியான எடை கொண்ட பழமாகப் பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பழம் அளவுக்கேற்ற எடையுடன் இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும். இத்தகைய பழங்களே அதிக இனிப்புடன் இருக்கும்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் நைட்ரேட் உரங்களை உபயோகிப்பதால், சுமார் 3 வாரங்களிலேயே பழங்கள் பெரிதாகிவிடுகின்றன. இத்தகைய பழங்களை வாங்கி உண்பதால் நைட்ரேட் நச்சுகள் உடலில் கலந்துவிடுகின்றன. அதைக் கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. பழத்தை இரண்டாக வெட்டும்போது நடுப்பகுதி வெள்ளையாகவும், பழத்தின் தோல் பகுதிக்கும், பழத்திற்கும் இடையில் மஞ்சள் நிறமாகக் காணப்பட்டால் அது நைட்ரேட் தாக்கம் அதிகமாக உள்ள தர்பூசணிப் பழம் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுதவிர பழங்களின் ஓர் இடத்தில் மட்டும் சிவப்பு நிறமாக இருந்தால் அந்தப் பழங்களில் நைட்ரேட் செலுத்தப்பட்டிருக்கலாம்.

நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி?

• தர்பூசணிப் பழத்தின் காம்பு காய்ந்திருந்தால், அந்தப் பழம் பழுத்து விட்டது என்று அர்த்தம். காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாகப் பழுப்பதற்கு முன்னரே பறிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இந்த வகை பழத்தை தவிர்த்துவிடுவது நல்லது.

• நல்ல தர்பூசணி வாங்குவது எப்படி..?சுவையான தர்பூசணி கண்டறிய டிப்ஸ் இதோ..! உங்கள் கையால் தர்பூசணியைத் தட்டி பாருங்கள். அதில் நல்ல ஆழமான சத்தம் வந்தால் அது பழுத்த பழம். அதிக பழுத்த பழம் என்றால் வெற்று அல்லது தட்டையாக ஒரு சத்தம் வரும்.

• தர்பூசணிப் பழத்தின் ஒரு துண்டை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு வைக்கலாம். சிறிதுநேரம் கழித்து தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியிருந்தால், அது அதிக ரசாயனம் ஏற்றப்பட்ட பழமாக இருக்கலாம். இது உடலுக்கு அதிக தீங்கை விளைவிப்பதாகும்.

• நாம் வாங்கும் தர்பூசணி எந்த வடிவம் என்பதில் கொஞ்சம் கவனம் வேண்டும். வட்டமான தர்பூசணி, நீள் வட்டமான தர்ப்பூசணி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... அதில் புடைப்புகள், வெட்டுக்கள் இருக்கக் கூடாது. சீரான வடிவத்தில் இருக்க வேண்டும்.

• தர்பூசணியைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அதன் அளவுக்கு ஏற்ற கனம் கொண்ட பழத்தை தேர்ந்தெடுங்கள். சில பழங்கள் பார்க்க பெரிதாகவும் கையில் எடுத்தால் எடையில்லாமலும் இருக்கும். அது வேண்டாம்.

• தர்பூசணியைச் சுற்றி மஞ்சள் நிறப் புள்ளி இருக்கிறதா என்பதை தேடுங்கள், இது கொடியின் உச்சக்கட்ட முதிர்ச்சியை குறிக்கும். ஆனால் வெள்ளை நிற புள்ளிகளை கண்டால் அதை தவிர்க்கவும்.

• உங்கள் கை அல்லது முஷ்டியால் தர்பூசணியைத் தட்டி பாருங்கள். அதில் நல்ல ஆழமான சத்தம் வந்தால் அது பழுத்த பழம். அதிக பழுத்த பழம் என்றால் வெற்று அல்லது தட்டையாக ஒரு சத்தம் வரும்.

• நன்கு பழுத்த தர்பூசணியானது எளிதில் கீற முடியாத உறுதியான தோலைக் கொண்டிருக்கும்.

• ஒரு தர்பூசணியின் காம்பு என்பது அறுவடையின் போது வெட்டப்பட்ட தண்டு. உலர்ந்த தண்டு பொதுவாக பழுத்த தர்பூசணியைக் குறிக்கிறது.

No comments