Breaking News

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு பள்ளிக் கல்வித் துறை செயலர் கடிதம் சில விவரங்கள்

 


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு பள்ளிக் கல்வித் துறை செயலர் கடிதம் சில விவரங்கள் 

➖➖➖➖➖➖➖➖➖

🎯 2024-2025 பொது மாறுதல் மற்றும் உபரி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு அரசு கடித எண் 3835/ப.க.5(1) 2024-1, நாள்:29.4.2024 வெளியாகி உள்ளது.

2. வழக்கமாக அரசாணையாக மாறுதல் கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வரும். இம்முறை தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் அரசு கடிதமாக வெளிவந்துள்ளது.

3. 28.5.24 ல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் ஒன்றியம்  விட்டு மாவட்டம் விட்டு பற்றியவிவரம் இல்லை. (சிலர் கூக்குரல் இட்டது போல் மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம விட்டு மாநிலம் உபரி மாறுதல் இல்லை)

4.பட்டதாரி ஆசிரியர்கள்  மாநில அளவில் உபரியாக இல்லாததால்,நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் இல்லை

5. ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலப் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையில் இணைக்கப்பட்டாலும் அத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாறுதல் பற்றிய குறிப்புரை இல்லை .மாநகராட்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் தவிர மீதமுள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வு அட்டவணையில் இடம் பெறவில்லை

6. அரசு கடிதத்தின் பார்வையில் அரசாணை நிலை எண் 243 நாள் 21 12 2023 பற்றிய குறிப்புரை இல்லை.இருப்பினும் அதன் அடிப்படையில் மாறுதல் நடைபெற உள்ளது.

8. பதவி உயர்வக்கு TET கட்டாயம் என உயர் நீதிமன்ற உத்தவு உள்ளதாலும்,உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாலும்,பதவிஉயர்வு பற்றிய அறிவிப்பு இல்லை .வழக்கின் இறுதி உத்தரவின் அடிப்படையில் நடைபெறும்m

9. முதன்முறையாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் ஒன்றியத்தை விடுத்து ஒன்றியம் விட்டு ஒன்றியம்  மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

10.  இம்முறை தனியார் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் உபரி பணியிட மாறுதல் இம்மாதமே நடைபெற உள்ளது

11.தேர்தல் நடத்தை விதிமுறைகள்  ஜுன் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்பு மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய பள்ளியில் பணி ஏற்க ஆணை வழங்கப்படும்.

No comments