ஆகஸ்ட் 1 முதல் எல்லாமே மாறுது.. நீங்கள் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்துபவரா? இதை தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் யுபிஐ (upi) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக யுபிஐ (UPI) மூலம் பணம் பரிமாற்றங்கள் மிகவும் விரைவாகவும்,
பரவலாகவும் நடந்து வருகின்றன. அதுவும் பெட்டிக்கடைகள் முதல் பெரிய சூப்பர்
மார்க்கெட்டுகள் வரை யுபிஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல்
இந்த யுபிஐ சேவையில் அவ்வப்போது பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன
அதன்படி வரும் ஆகஸ்ட் 1 2025 முதல் சில புதிய விதிகள் நடைமுறைக்கு
வருகிறது. குறிப்பாக போன் பே (PhonePe), கூகுள் பே (Google Pay), பேடிஎம்
(Paytm) போன்றவை பண பரிமாற்றத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகளைப் பின்பற்ற
வேண்டும். இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது இதில் முக்கியமானவை என்னவென்றால், உங்கள் வங்கி கணக்கு இருப்பு
சரிபார்த்தல், பரிவர்த்தனை நிலையை (transaction status) உறுதி செய்தல்,
மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளின் பட்டியல், ஆட்டோமேட்டிக்
பணம் செலுத்தும் (auto-pay mandate) சேவைகளுக்கு விதிக்கப்படும் வரம்புகள்
என பல புதிய விதிமுறைகள் வருகின்றன.
பேலன்ஸ் சரிபார்ப்பு: போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்பே போன்ற யுபிஐ
ஆப்கள் மூலம் உங்கள் வங்கி பேலன்ஸ் சரிபார்க்கும் முறையில் புதிய விதி அமல்
ஆகிறது. அதுவும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஒவ்வொரு யுபிஐ ஆப்பிலும் 24 மணி
நேரத்திற்கு உங்களுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேங்க் பேலன்ஸ் பார்க்க
அனுமதிக்கப்படும்.
எனவே இதனால் கூகுள் பே செயலியில் 50 முறை, போன்பே செயலியில் 50 முறை
என, ஒவ்வொரு ஆப்பிலும் தனித்தனியே 50 முறை பேலன்ஸ் சரிபார்க்க முடியும்
என்பது குறிப்பிடத்தக்கது.
பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு: சர்வீஸ் ப்ரோவைடர்கள் அல்லது
வங்கிகள் மூலம் ஒரு பரிவர்த்தனையின் நிலையைச் சரிபார்க்கும் எண்ணிக்கை
புதிய விதிகளின் படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இனி 2 மணி நேரத்தில்
அதிகட்சம் 3 முறை மட்டுமே பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்க முடியும் என்று
கூறப்படுகிறது. இதில் இரண்டு சரிபார்ப்பு முயற்சிகளுக்கிடையில் குறைந்தது
90 நொடிகள் இடைவெளி இருக்க வேண்டும். அதுவும் ஒரு பரிவர்த்தனை முடிந்தது.
அதைச் சரிபார்க்க 45 முதல் 60 நொடிகள் காத்திருந்து பார்க்க வேண்டியது
அவசியம் ஆகும்.
ஆட்டோமேட்டிக் பணம் செலுத்தும் சேவை: எஸ்பிஐ, நெட்பிளிக்ஸ் போன்றவற்றில்
மாதம் மாதம் ஆட்டோபே மூலம் பணம் செலுத்தும்போது, பணம் கட்டும் நேரம்
நன்-பீக் ஹவர்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல்
மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9.30 மணிக்கு பிறகு மட்டுமே பணம் செலுத்த
முடியும். இதனால் இந்த நேரங்களுக்கு மட்டுமே ஆட்டோ டெபிட் பணம் செலுத்த
முடியும் என்பதைக் கவனிக்கலாம்.
மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு: அதாவது உங்களது மொபைல் எண் எந்த
வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை இப்போது
ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக யுபிஐ சேவையில் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள்
கொண்டுவரப்படுகின்றன. அதுவும் இந்த பாதுகாப்பு அம்சங்கள் அனைவருக்கும்
மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments