பழைய ஓய்வூதிய திட்டம்.. பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் வருமா?
குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதிலுமுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து, அதை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், பேசிய முதல்வர் ஸ்டாலின், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்திருந்தார்..
இதையடுத்து, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு இருந்த ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது.. இதன் மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து, அதற்கான பணப்பலன்களை பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், பல வருடங்களாகவே, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காகவே பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் களமிறங்கி வருகின்றன..
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று சொல்வது பொய்யானது.. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறார்.. பழைய ஓய்வூதியம் குறித்தும் அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஓ.பன்னீர்செல்வம் அதேபோல, பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக அரசுக்கு வலுத்தபடி உள்ளது.. இன்றுகூட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது: "பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"" என்று 2021 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது. தி.மு.க.வின் ஆட்சியே முடிவடையும் தருவாயில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. இதுதான் "சொல்வதை செய்வோம்"என்பதற்கு இலக்கணம் போலும்.
ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை மக்களின் மீது அனைத்து வரிகளையும் சுமத்தி, ஆண்டொன்றுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை ஈட்டும் தி.மு.க. அரசு, ஆட்சி முடியும் தருவாயிலும் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையினை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் 2012 முதல் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமூக நலக்கூட்டங்கள் சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. இவர்கள் தங்களது பணி நிரந்தரக் கோரிக்கையினை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்து சமூக நலக் கூடங்களில் தங்க வைத்திருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments