Breaking News

பென்சன் வாங்குவோருக்கு தமிழ்நாடு அரசு ஹேப்பி நியூஸ்.. களஞ்சியம் ஆப் போதும்.. ஈசியா வேலையை முடிக்கலாம்!

 


தமிழ்நாட்டில் பென்சன் வாங்குவோருக்கு சூப்பர் வசதி.. இனி ஈசியா இதைச் செய்யலாம். பென்சன் பணம் தொடர்ந்து கிடைக்கும்.

களஞ்சியம் மொபைல் ஆப் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம். 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் களஞ்சியம் என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. களஞ்சியம் செயலி மூலமாக அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பு, சம்பளம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்ற பல்வேறு சேவைகளை எளிதாகப் பெறமுடிகிறது. 

ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழ் அல்லது வாழ்நாள் சான்றிதழை களஞ்சியம் செயலி மூலம் சமர்ப்பிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான வசதி தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தால் அதை ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கருவூலத் துறை ஆணையரிடம் இருந்து வரும்.

முதலில் கூகுள் பிளே ஸ்ரோ தளத்தில் களஞ்சியம் மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதற்கு இந்த நேரடி லிங்க்கையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam

அடுத்து உங்களுடைய PPO போன்ற விபரங்களை உள்ளிட்டு நான்கு இலக்க PIN நம்பரை சேமித்து உள்ளே சென்று Mustering என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் அதில் வரும் பச்சை நிற வட்டத்தில் உங்கள் முகத்தை கண்ணாடி இல்லாமல் காண்பித்து இரண்டு அல்லது மூன்று முறை கண்களை சிமிட்டினால் உங்கள் ஆயுள் சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக SMS வரும். இந்த முயற்சியை பகலில் செய்தால் நல்லது. 

உண்மையில் ஆயுள் சான்றிதழ் அல்லது வாழ்நாள் சான்றிதழ் என்பது பென்சன் வாங்குவோர் தங்களுடைய பென்சன் தொகையை தொடர்ந்து பெறுவதற்கான ஒரு ஆவணம் ஆகும். பென்சன் வாங்குவோர் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதையும், சரியான பயனாளிகளுக்கே உதவி கிடைக்கிறது என்பதை உறுதி செய்யவும் இந்த ஆயுள் சான்றிதழ் பயன்படுகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த வசதி அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்கள் மிக எளிதாக எந்த சிரமமும் இல்லாமல் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். பென்சன் பணம் கிடைப்பதிலும் சிரமம் இருக்காது. 

 

No comments