மெயில் வந்தா உஷாரா இருங்க.. ஷாக்கான சம்பளதாரர்கள்.. வருமான வரித்துறை அனுப்பும் நோட்டீஸ்.. கவனம் :
வருமான வரி ரிட்டர்ன் தொடர்பாக வருமான வரித் துறை பல்வேறு நபர்களுக்கு
கடந்த சில நாட்களாக பல ஆயிரம் நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. தவறான வருமான வரி கணக்கு தாக்கல்
செய்தவர்களுக்கும் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இப்போதே இதே
முறையை பயன்படுத்தி மோசடிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது வருமான
வரித்துறை போர்வையில் சில விஷமிகள் மோசடி லிங்குகளை அனுப்புவதாக
கூறப்படுகிறது.
வருமான வரி கணக்குகளில் முறைகேடாக விலக்கு கோருபவர்களைக் குறிவைத்து,
நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக, இன்று காலை பல ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கையாக
அமைந்துள்ளது.
சிலர், சிறு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை
அளிப்பதற்கான விலக்குகள் கேட்டு உள்ளனர். இவை கண்டிப்பாக
விசாரிக்கப்படும். அதேபோல் சுகாதார காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகள்
(பிரிவு 80D மற்றும் 80DDB), HRA (பிரிவு 10(13A)), கல்வி மற்றும்
வீட்டுக்கடன் மீதான வட்டி, மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான
விலக்குகளும் (பிரிவு 80E, 80EE, 80EEB) இந்த நடவடிக்கையின் கீழ் விசாரணை
செய்யப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.
இது குறித்து வரி செலுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.
மோசடி
ஆனால் இப்போதே இதே முறையை பயன்படுத்தி மோசடிகள் நடப்பதாகவும்
கூறப்படுகிறது. அதாவது வருமான வரித்துறை போர்வையில் சில விஷமிகள் மோசடி
லிங்குகளை அனுப்புவதாக கூறப்படுகிறது.
1. வருமான வரித்துறை போலவே மெயில் ஐடி உருவாக்கி உங்களுக்கு மெயில் வரலாம்.
2. இந்த மெயிலில் உள்ள லிங்கை கிளிக் செய்த பின் அதில் வருமான வரி
விவரங்கள், வங்கி விவரங்கள் கேட்கப்படும்.
3. இதை பயன்படுத்தி உங்களின் பணம் திருடப்படலாம் என்று வருமான வரித்துறை
எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமான வரித்துறை கண்டிப்பு
வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, வரி ஏய்ப்பு
செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. முறையாக வருமான வரி
கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரி செலுத்துவோர்
மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த நடவடிக்கையின்
மூலம், வரி செலுத்துவோர் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
மேலும், வரி ஏய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட
நபர்களிடம் விசாரணை நடத்தப்படும். சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கை, வரி விதிப்புகளை முறையாகப்
பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வரி செலுத்துவோர் தங்கள்
கணக்குகளைச் சரியாகப் பராமரித்து, உரிய நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் வரி அமைப்பின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.
அதிக விலக்கு கோரிய MNC ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு
அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் இந்த
ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments