மத்திய உளவுத்துறையில் வேலை.. மாதம் 1.40 லட்சம் வரை சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்
மத்திய உளவுத்துறையில் ACIO-II -இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை ரூ. 44,900 முதல் 1,42,400 வரை வழங்கப்படும்.
மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறை, நாட்டின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான அமைப்பாக இது கருதப்படுகிறது.
டெல்லியில் இதன் தலைமையகம் உள்ளது. மத்திய உளவுத்துறையில் காலியாக
உள்ள ACIO-II பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த
பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது
பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்;
உதவி மத்திய புலனாய்வு அதிகாரி Grade - III பணியிடங்கள் - 3,717
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் பொதுப்பிரிவு 1,337,
இடபிள்யூஎஸ்- 442, ஓபிசி - 946, எஸ்சி - 566, எஸ்.டி- 226 என மொத்தம் 3,717
பணியிடங்கள் உள்ளன.
சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசின் ஊதிய விகிதம் லெவல் 7-இன் படி ரூ. 44,900 முதல் 1,42,400
ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்
டிகிரி முடித்து இருக்க வேண்டும். கணிணி பற்றிய அறிவு அவசியம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உள்ளது. எஸ்.சி/எஸ்.டி
பிரிவினருக்கு ரூ.5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்
தளர்வுகள் அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் இந்த பணியிடத்திற்கு
விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு (Tier-I, Tier-II), நேர்முகத்தேர்வு அடிப்படையில்
தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக் கட்டணமாக ரூ.650 செலுத்த
வேண்டும். எஸ்சி / எஸ்டி, பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.550 செலுத்த
வேண்டும். ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். https://www.mha.gov.in/
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம்
தொடங்கும் நாள்: 19.07.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்; 10.08.2025
ஆகும்.
No comments