மீண்டும் வரும் பழைய ஓய்வூதிய திட்டம்? அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டம் அரசு ஊழியர்களின் பங்களிப்புடன் நிர்வகிக்கப்படும் ஒரு திட்டம் ஆகும். இது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் பெரிய நன்மைகள் இல்லை என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். எதிர்கட்சிகளும் திமுக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இச்சூழலில் நேற்றைய முன்தினம் (ஜூலை 18) பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலுயுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பழைய ஓய்வூதியம் குறித்து அமைச்சர் ஐ. பெரியசாமி பேசி உள்ளார். அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பள்ளி ஆசிரியர் இரண்டாவது நாள் வேலை நிறுத்தம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவர்களது ஓய்வூதியம் குறித்து கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார். ஏற்கனவே அமைச்சர் ஐ. பெரியசாமி, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசியிருந்த நிலையில்,தற்போது மீண்டும் நம்பிக்கை அளித்துள்ளார். அப்போது, பள்ளி ஆசிரியர் இரண்டாவது நாள் வேலை நிறுத்தம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவர்களது ஓய்வூதியம் குறித்து கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார். ஏற்கனவே அமைச்சர் ஐ. பெரியசாமி, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசியிருந்த நிலையில்,தற்போது மீண்டும் நம்பிக்கை அளித்துள்ளார்.
No comments