Breaking News

காமராஜர் பற்றிய 2 நிமிட பேச்சு | 2 Minute Speech About Kamarajar in Tamil..!

 

நாம் நிறைய தலைவர்களை பற்றி கேள்வி பட்டிருப்போம். அவர்கள் செய்த சாதனை மற்றும் தொன்றுகளை பற்றி அதிகமாக படித்து இருப்போம். இத்தகைய வகையில் எண்ணற்ற தலைவர்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட ஒரு சில தலைவர்கள் இதில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தினை பிடித்து உள்ளார்கள். இவ்வாறு பார்க்கும் போதும் ஒரு தலைவருக்கும் சிறப்பு பெயர்கள் என்று இருக்கும். அவருடைய சொந்த பெயரை விட இத்தகைய சிறப்பு பெயர் தான் அனைவர் மனத்திலும் படிந்த ஒன்றாக இருக்கும். அந்த வகையில் கரமவீரர் என்றாலும், பெருந்தலைவர் என்றாலும் நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது காமராஜர் தான். அதுமட்டும் இல்லாமல் வரும் ஜூலை 15-ஆம் தேதி அன்று காமராஜர் பிறந்தநாள் வரவிருக்கிறது. ஆகவே அதனை சிறப்புக்கும் வகையில் இன்றைய பதிவில் காமராஜர் பற்றிய பேச்சினை வெறும் 2 நிமிடத்தில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

2 Minute Speech About Kamarajar in Tamil |தமிழில் காமராஜர் பற்றி 2 நிமிட பேச்சு:

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக 1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் தேதி அன்று அனைவராலும் புகழந்து பேசப்படும் காமராஜர் பிறந்தார்.

இவரது பெற்றோர் இவருக்கு வைத்த காமாட்சி என்ற பெயரை பின்பு காலத்தினாலும் இவர் செய்த பல சாதனைகளும் காலப்போக்கில் காமராஜர் என்று மாற்றி வைத்து கொண்டார்.

காமராஜர் தந்தை இறந்து போன காரணத்தினால் ஏழ்மையான குடும்பத்தின் சூழ்நிலையினை கருதி பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். ஆனால் இவர் செய்த சாதனைகளும், பணிகளும் இவருக்கு படிக்காத மேதை என்ற படத்தினை அளித்தது.

இதனை தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு வரை கர்ம வீரர் காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்தார். இத்தகைய முதலமைச்சர் பணியில் இருக்கும் போது கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடம் மற்றும் ஏழை எளிய குழந்தைகளின் நலன் கருதி மதிய உணவு திட்டத்தினையும் அறிமுகம் செய்தார்.

அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் அணைகளையும் மக்களின் நலன் கருதி நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்த அத்தகைய காலம் ஆனது மக்களுக்கு எண்ணற்ற சாதகமான பலன்கள் கிடைத்ததால் அவை அனைத்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் காமராஜர் ஆட்சி செய்த காலம் தமிழகத்தின் பொற்காலம் என்று மக்கள் அனைவராலும் புகழப்பட்டது.

இவர் தான் முழுவதையும் மக்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைசி வரை திருமணம் என்ற ஒன்றை செய்து கொள்ளாமலே வாழ்ந்தார். மேலும் இவர் கர்மவீரர், தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர் மற்றும் படிக்காத மேதை என்று அழைக்கப்பட்டார்.

1953-ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். தன்னுடைய முதல் பணியாக குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.

17000-த்திற்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏறுபடுத்தினார்.

இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று அவரது 72-வது வயதில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

No comments