சிறப்பு FD திட்டம்: எந்த வங்கியில் அதிக வட்டி? ரூ.10.25 லட்சம் போட்டால் எவ்வளவு கிடைக்கும்?
444 Days FD Investment: நிலையான வைப்புத்தொகை திட்டம் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் வங்கியில் உங்களின் பெயரில் டெபாசிட் செய்து வைப்பீர்கள். இப்போது 444 நாள்களுக்கான FD திட்டம் என்றால், 444 நாள்களுக்கு உங்களின் முதலீட்டுத் தொகை டெபாசிட் செய்யப்பட்டு 444 நாள்களில் முதிர்ச்சி அடையும். இதற்கு வட்டி விகிதம் வங்கியால் நிர்ணயிக்கப்படும். வட்டி விகிதத்திற்கு ஏற்ப வட்டி வருவாய் அமையும்.
அந்த வகையில், நாட்டில் பல்வேறு வங்கிகள் 444 நாள்களுக்கான சிறப்பு FD திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் வழக்கமான FD திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி அல்லாமல் சற்று அதிக வட்டி விகிதம் வழங்கப்படும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), பஞ்சாப் & சிந்த் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), இந்தியன் வங்கி ஆகிய நான்கு வங்கிகள் 444 நாள்களுக்கான சிறப்பு FD திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த 4 வங்கிகளின் திட்டத்தில் முதலீட்டாளர்கள் தலா ரூ.10.52 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறார்கள் என்றால், திட்டம் முதிர்ச்சியடையும்போது எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI): எஸ்பிஐ வங்கி அம்ரித் விருஷ்டி திட்டத்தின் கீழ் 444 நாள்களுக்கான FD திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் ரூ.10.25 லட்சம் போட்டுவைத்தால், திட்டம் முதிர்ச்சி அடையும் போது மொத்தம் ரூ.11,09,958.24 கிடைக்கும். அதில் ரூ.84,958.24 வட்டி வருவாய் ஆகும்.
இந்தியன் வங்கி: இங்கு 444 நாள்களுக்கான FD திட்டத்தில் 6.90% வட்டி வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் ரூ.10.25 லட்சம் போட்டுவைத்தால், திட்டம் முதிர்ச்சி அடையும் போது மொத்தம் ரூ.11,13,948.76 கிடைக்கும். அதில் ரூ.88,948.29 வட்டி வருவாய் ஆகும்
பஞ்சாப் & சிந்த் வங்கி: இந்த வங்கியில் 444 நாள்களுக்கான FD திட்டத்தில் 7.05% வட்டி வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் ரூ.10.25 லட்சம் போட்டுவைத்தால், திட்டம் முதிர்ச்சி அடையும் போது மொத்தம் ரூ.11,15,948.29 கிடைக்கும். அதில் ரூ.90,948.29 வட்டி வருவாய் ஆகும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB): இந்த வங்கியில் 444 நாள்களுக்கான FD திட்டத்தில் 7.10% வட்டி வழங்கப்படுகிறது. 4 வங்கிகளில் இதுதான் அதிக வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இதில் நீங்கள் ரூ.10.25 லட்சம் போட்டுவைத்தால், திட்டம் முதிர்ச்சி அடையும் போது மொத்தம் ரூ.11,16,615.44 கிடைக்கும். அதில் ரூ.91,615.44 வட்டி வருவாய் ஆகும்.
No comments