TNEA 2025: பொறியியல் கவுன்சலிங்: சாய்ஸ் ஃபில்லிங்கில் ரவுண்ட் 1 மாணவர்கள் செய்த தவறுகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: சாய்ஸ் ஃபில்லிங்கில் முதல் சுற்று மாணவர்கள் செய்த தவறுகள் என்ன? இரண்டாம் சுற்று மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன? நிபுணர் விளக்கம்.
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், முதல் சுற்று மாணவர்கள் செய்த தவறுகள் என்ன? இரண்டாம் சுற்று மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்த நிலையில், சுமார் 30000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது.
இந்தநிலையில், முதல் சுற்று மாணவர்கள் செய்த தவறுகள் என்ன? இரண்டாம் சுற்று மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன? என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார்.
இரண்டாம் சுற்று கவுன்சலிங்கில் 178.9 – 143 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரை கலந்துக் கொள்வர். கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய உள்ளனர்.
ரவுண்ட் 1 மாணவர்கள் செய்த தவறுகள்
ரவுண்ட் 1ல் நிறைய மாணவர்கள் தவறு செய்துள்ளனர். முதலில் தவறான சாய்ஸ் ஃபில்லிங் செய்து விரும்பிய கோர்ஸ் கிடைக்காமல் தவிக்கின்றனர். அடுத்து கவுன்சலிங்கின் போட்டித்தன்மையை மதிப்பிடத் தெரியவில்லை. கல்லூரிகளின் கட்டண விபரங்கள் தெரியாமல் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
அடுத்து குறைவான சாய்ஸ்களை கொடுப்பது, அதுவும் டாப் கல்லூரிகளை மட்டும் கொடுப்பது, சீட் கிடைக்காமல் இருக்கும் நிலைக்கு தள்ளியது. அடுத்து ஒரே ஒரு கோர்ஸை மட்டும் தேர்வு செய்வது, மிகப்பெரிய தவறு.
சாய்ஸ்களை சமர்ப்பிக்கும் முன் சரி பார்க்காமல் சமர்பித்தது. உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு எந்த கல்லூரி, எந்த கோர்ஸ் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொண்டு, அதனை விட அதிகமான சாய்ஸ்களை தேர்வு செய்யுங்கள்.
அடுத்து எந்த காலேஜ், எந்த கோர்ஸ் முதலில் கொடுக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் சாய்ஸ் ஃபில்லிங் செய்து, விரும்பிய கல்லூரி கிடைக்காமல் போனது.
ரவுண்ட் 2 மாணவர்கள் செய்ய வேண்டியது
அதிகமான சாய்ஸ் ஃபில்லிங் செய்யுங்கள். கட் ஆஃப் கடந்த ஆண்டை விட 30 மதிப்பெண்கள் வரை அதிகமாக உள்ளதால், அதற்கு ஏற்றாற்போல் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும்.
கல்லூரிகளின் கட்டண விபரங்களை தெரிந்துக் கொண்டு சாய்ஸ் ஃபில்லிங் செய்யுங்கள்.
துறை சார்ந்த அனைத்து கோர்ஸ்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். ஒரே கோர்ஸை மட்டும் தேர்வு செய்ய வேண்டாம்.
No comments