கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசையா? ஐ.ஐ.டி அல்லாத சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இதோ…
ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஐ.ஐ.டி.,களிலும் (IIT) அவற்றின் துறைகளிலும் சேர்க்கை பெற வாய்ப்பு பெறுகிறார்கள்; இருப்பினும், நீங்கள் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணைத் தேர்ச்சி பெறாதவராக இருந்தாலும், கணினி அறிவியல் பொறியியல் (CSE) படிக்க ஆர்வமாக இருந்தால், புகழ்பெற்ற கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைக் கொண்ட இந்த ஐ.ஐ.டி அல்லாத பொறியியல் கல்லூரிகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2024 இன் படி, இவை சிறந்த ஐ.ஐ.டி அல்லாத பொறியியல் கல்லூரிகள்.
என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) 2024 இல் உள்ள சில ஐ.ஐ.டி அல்லாத முதல் 50 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளைப் பார்ப்போம்.
என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் கல்லூரிகளின் பட்டியல்
9 - தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி
11 - வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்
12 - ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
13 - எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
14 - அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
17 - கர்நாடக தேசிய தொழில்நுட்ப நிறுவனம், சூரத்கல்
19 - தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்கேலா
20 - பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், பிலானி
21 - தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வாரங்கல்
23 - அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோவை
24 - ஜாமியா மில்லியா இஸ்லாமியா
25 - தேசிய தொழில்நுட்ப நிறுவனம், கோழிக்கோடு
26 - சிக்ஷா `ஓ` அனுசந்தன்
27 - டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
29 - தாப்பர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)
30 - அமிட்டி பல்கலைக்கழகம்
32 - சண்டிகர் பல்கலைக்கழகம்
33 - அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
35 - கோனேரு லட்சுமய்யா கல்வி அறக்கட்டளை பல்கலைக்கழகம் (கே.எல். பொறியியல் கல்லூரி)
36 - கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி, கோவை
37 - கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம்
38 - சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாடமி - தஞ்சாவூர்
39 - விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்ப நிறுவனம், நாக்பூர்
40 - தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சில்சார்
41 - வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம்
42 – யு.பி.இ.எஸ்
43 - மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
44 - தேசிய தொழில்நுட்ப நிறுவனம் துர்காபூர்
45 - தேசிய தொழில்நுட்ப நிறுவனம் டெல்லி
46 - ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, சென்னை
47 - சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஹைதராபாத்
48 - பிர்லா தொழில்நுட்ப நிறுவனம்
49 - இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஷிப்பூர்
50 - லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகம்
இப்போது, தமிழகத்தில் உள்ள ஐ.ஐ.டி அல்லாத சில பொறியியல் கல்லூரிகளைப் பற்றி, குறிப்பாக அவற்றின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) திருச்சிராப்பள்ளி, 1964 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பின் கீழ் மாநில அரசால் திருச்சிராப்பள்ளியில் ஒரு பிராந்திய பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது.
திருச்சி என்.ஐ.டி இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும், 220 நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் பங்கேற்கின்றன. 2023-24 கல்வி அமர்வில், கணினி அறிவியலில் இளங்கலை மாணவர்களில் 96.9 சதவீதம் பேர் வேலைவாய்ப்பில் பங்கேற்றனர்; மறுபுறம், M.Tech CSE பாடத்தில், 93.3 சதவீத மாணவர்கள் வேலை வாய்ப்பில் பங்கேற்றனர்.
வேலைவாய்ப்பில், இன்டெல், மோர்கன் ஸ்டான்லி, ஹெச்.சி.எல் (HCL), கூகுள், பேஸ்புக், ஹனிவெல், மைக்ரோசாப்ட், ஹெச்.எஸ்.பி.சி (HSBC), மெக்காஃபி, ரிலையன்ஸ், பெப்சிகோ, டாடா, சாம்சங் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்
1984 ஆம் ஆண்டு ஒரு சுயநிதி நிறுவனமாக நிறுவப்பட்ட வி.ஐ.டி (VIT), QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 இல் 691வது இடத்தில் இருந்தது. இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பொறியியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி தகவலியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் வணிக அமைப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் பாதுகாப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், மற்றும் தரவு அறிவியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அமேசான், ஆரக்கிள் மற்றும் டெல் போன்ற நிறுவனங்களுடன் கடந்த வேலைவாய்ப்பு அமர்வில் வளாக வேலைவாய்ப்புகளில் இருந்து மாணவர்களை வேலைக்கு அமர்த்திய வி.ஐ.டி, ரூ.1 கோடி என்ற அதிகபட்ச ஆண்டு சம்பள தொகுப்பை அடைந்துள்ளது.
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
இந்த நிறுவனம் அதன் பாடநெறியின் பெயரை கணினி தொழில்நுட்பத் துறை என மறுபெயரிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, கடந்த வேலைவாய்ப்பு அமர்வில் எட்டு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளுடன் கல்லூரி 700க்கும் மேற்பட்ட கனவு சலுகைகளைப் பெற்றுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், வேலைவாய்ப்பு விகிதம் தொடர்ந்து 90 சதவீதத்தைத் தாண்டியுள்ளது, வழங்கப்படும் அதிகபட்ச தொகுப்பு 2025 இல் ஆண்டுக்கு ரூ.65 லட்சத்தை எட்டியது. 2024 இல் சராசரி தொகுப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.7.19 லட்சம். டி.சி.எஸ் (TCS), இன்ஃபோசிஸ் (Infosys), விப்ரோ (Wipro), ஹெச்.சி.எல் (HCL) மற்றும் அக்சென்ச்சர் (Accenture) போன்ற முன்னணி ஐ.டி (IT) சேவை நிறுவனங்களுடன் மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள், டெல் மற்றும் ஐ.பி.எம் (IBM) போன்ற பல்வேறு ஆட்சேர்ப்பு நிறுவனங்களும் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 2022-2023 வேலைவாய்ப்பு அமர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த 171 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர், இது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமீபத்தியது. 2021-22 ஆம் ஆண்டில், 166 மாணவர்கள் அக்சென்ச்சர் இந்தியா (Accenture India), அடோப் (Adobe), காக்னிசென்ட் (Cognizant), ஹிட்டாட்சி எனர்ஜி (Hitachi Energy), இன்ஃபோசிஸ் (Infosys), மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley) போன்ற நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
வழங்கப்பட்ட அதிகபட்ச வருடாந்திர தொகுப்பு டி.இ ஷா இந்தியா (D.E. Shaw India) நிறுவனத்தால் ஆண்டுக்கு ரூ.36.5 லட்சம், அதைத் தொடர்ந்து மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தால் ஆண்டுக்கு ரூ.29.5 லட்சம் மற்றும் விசா இன்க் (VISA Inc) நிறுவனத்தால் ஆண்டுக்கு ரூ.28.54 லட்சம் ஆகும். எஸ்.ஏ.பி லேப்ஸ் (SAP Labs) (ஆண்டுக்கு ரூ.24.5 லட்சம்), வெல்ஸ் ஃபார்கோ (Wells Fargo) (ஆண்டுக்கு ரூ.19.5 லட்சம்), மற்றும் வெர்ஸ்டன் டிஜிட்டல் (Western Digital) (ஆண்டுக்கு ரூ.19 லட்சம்) ஆகியவை பிற சிறந்த ஆட்சேர்ப்பு நிறுவனங்களில் அடங்கும்
No comments