Breaking News

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு குட் நியூஸ்! பசங்களும் கலந்து கொள்ளலாம்

 


10 ஆம் வகுப்பு முடித்து தொழில் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலருக்கும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை அரசு சார்பில் கொடுக்கப்பட உள்ளது. ஒருவேளை இந்த தொழில் உங்களுக்கு உகந்ததாக மாறிவிட்டால் நீங்கள் குறுகிய காலத்தில் தொழிலபதிபராக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த பயிற்சி எங்கு நடக்கிறது, என்னென்ன கற்றுக்கொள்ளலாம், இதனால் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள் என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

மூலிகை அழகுசாதனப் பொருட்கள், தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சியை நடத்துகிறது. இந்த பயிற்சி வரும் 23.07. 2025 முதல் 25.07.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு (Bio - ENZYME), ஆயுர்வேத சோப்பு, முடி வளரும் எண்ணெய், முடி வளரும் ஷாம்பு. ஃபேஸ் வாஷ் ஜெல், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி / கைபேசி எண்கள் -  8668102600 / 8072914694.  வேண்டிய முகவரி - தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல் நேரில் சென்று விசாரித்துக் கொள்ளலாம். 

 

No comments